Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டங்கி படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டி யின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல்.

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி யின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகி யுள்ள “டங்கி” படத்தின் இசைப்பய ணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 – வை வெளியிடு வதன் மூலம் தொடங்கியுள்ளனர். ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதை யாக பாடல் முழுதும் நிரம்பியி ருக்கிறது.

மேஸ்ட்ரோ ப்ரீதம் உடைய மெல்லிசை விருந்தில், அரிஜித் சிங்கின் ஆத்மார்த்தமான குரலில், ஸ்வானந்த் கிர்கிரே மற்றும் ஐபி சிங் பாடல் வரிகளில் இந்த மெலோடி மனதைக் கவர்கிறது. புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அற்புத நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் ஒரு துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப்பாடல்.

ஒரு தலைசிறந்த கதை சொல்லி யாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக் களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான ரத்தினமான படைப்பாக டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கத் தயாராக உள்ளார்.

இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 21 – 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

https://bit.ly/LuttPuttGaya-Dunki

Related posts

‘அருவ சண்ட’ இன்றைய காலகட்டத்துக்கு தேவையான படம்: தயாரிப்பாளர்கள் பாராட்டு

Jai Chandran

4.25 லட்சம் சொல்லுடன் கார்க்கி உருவாக்கிய சொல் அகராதி

Jai Chandran

Fastest50MForPushpaRajIntro

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend