Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்

கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* . அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த்* *சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு விஷ்ணு ரங்க சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குனராக ராமு தங்கராஜ் மற்றும் படத்தொகுப் பாளராக பி.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன் , நிர்வாக தயாரிப்பாளர் என் சுப்ரமணியன் .

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவன தலைமை அதிகாரி ஜி கே எம்.  தமிழ் குமரன் தெரிவித்தார் .

மக்கள் தொடர்பு
ரியாஸ் கே அஹமத்
V4U Media

Related posts

சான்றிதழ் (பட விமர்சனம்)

Jai Chandran

‘Kasethan Kadavulada’ Shooting Nears Completion

Jai Chandran

VANAM Movie Trailer

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend