இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை தந்தற்காக மத்திய அரசு 51வது தாதா சாகேப் பால்கே விருதுகளை இன்று அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை அறிவித்தார். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக இது கருத்தப்படுகிறது.. தங்கத் தாமரை பதக்கம், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு இத்துடன் அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்த விருதை பெற்றார்.
தாதா சாகேப் விருது பெறும் ரஜினிகாந்த்துக்கு பிரதமர் மோடி. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக் த்லைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் போன்றவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:
பிரதம மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து:
பல தலைமுறைகளிடையே பிரபலமானவர் ரஜினிகாந்த். இவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஒரு ஆளுமை. அதுதான் ரஜினிகாந்த். தலைவனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி. அவருக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து
திரைத்துறையில் தங்களது நடிப்புத் திறமைக்கும், கடின உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் இந்த தாதா சாகேப் பால்கே விருது ஆகும். தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வாழ்த்து:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து:
உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.
அம்மமு தலைவர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து:
பமக அன்புமணி ராமதாஸ்:
நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து: