தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து “தலைவர் என்.ராமசாமி@முரளி ராமநாராயணன், செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் வெளியீட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவினால் கருத்து சுதந்திரம் பறிபோவது இல்லாமல், தயாரிப்பாளர்கள் அதனால் எந்த அளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி நேற்றைய தினம் (05.06.21) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்” அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்தோம்.
பல்வேறு அரசுப் பணிகளுக்கி டையே தமிழ்த் திரையுலகை காத்திட மேற்படி, கோரிக்கையை ஏற்று உடனடியாக திரையுலகிற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் அவர்கள் தமிழக அரசின் நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

