Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு முதல்வர் ஸ்டாலின், எம் எல் ஏ உதயநிதிக்கு நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்த கூட்டுக்குழு  கூட்டறிக்கை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும், இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு கடந்த அன்று கலந்தாய்வு கூட்டம் நடத்தியது. அதில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. குறிப்பாக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கபடாத வண்ணம் கோயாம்புத்தூர் மாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடி இருக்கும் திரையரங்குகள் திறக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடத்தில் ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

எங்களது கோரிக்கையை கனிவுடன் ஏற்று, தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து தற்போது கோயம்பத்தூர் மாநகரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என்ற அரசாணை வெளியீட்டுருப்பது தமிழ் திரையுலகினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும் தமிழ் திரையுலகினரின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

1Million Likes For PushpaRaj Intro

Jai Chandran

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Jai Chandran

“அற்றைத்திங்கள் அந்நிலவில்” இசை விழாவில் ஐ லியோனி ருசிகர பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend