Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாசின் “கல்கி 2898 AD” பட தீம் மியூசிக் அரங்கேற்றம்

பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படத்தின் பின்னணி இசையின் சிறு கோர்வை , ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக அரங்கேற்ற மாகியுள்ளது !!

வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், நடிப்பில். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்தியா சினிமா உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ‘கல்கி 2898 AD’ படத்தின் தீம் இசை ரசிகர்களுக் காக பிரத்தியேகமாக அரங்கேற்றப் பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் “நீயே ஒளி” இசை நிகழ்ச்சியில், ரசிகர்களுக்காகப் பிரத்தியேகமாக, ‘கல்கி 2898 AD’ படத்தின் தீம் இசைக்கோர்வை அரங்கேற்றப்பட்டது. எதிர்பாராத இந்த சர்ப்ரைஸால், ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது இணையத்தில் இந்த தகவல் வைரலாக பரவ, ரசிகர்கள், அந்த தீம் இசையின் முழு வடிவத்தை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம், எதிர்காலத்தில் நிகழும் ஃபேண்டஸி திரை அனுபவமாக உருவாகி வருகிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இதுவரை இந்திய சினிமா பார்த்தி ராத பிரம்மாண்டத்தில் ‘கல்கி 2898 AD’ படம் புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாக உருவாகி வருகிறது.

இப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் இப்படம் ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தைப் பார்வையாளர் களுக்கு வழங்கும் என உறுதிய ளித்தது. இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கே.வி.ஆனந்த் மறைவிற்கு ஏ ஜி எஸ் பட நிறுவனம் இரங்கல்..

Jai Chandran

Large Celebration of Republic Day – Kamal Haasan

Jai Chandran

ThanneVandi is all set release in theatres from 17th Dec

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend