தமிழக சட்டமன்ற 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி வாக்கு பதிவு நடந்தது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது.
வாக்குபதிவுகள் முடிந்து கடந்த ஒரு மாதமாக வாக்கு எண்ணும் மையங்களில் மின் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது. இந்நிலையில் மே 2ம் தேதி ஞாயிற்றுகிழமை யான இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப் பட்டன. 8.30 மணிக்கு பிறகு மின் எந்திர வாக்குகள் எண்ணப்பட்டன.
தொடக்கம் முதலே திமுக அணி முன்னணியில் இருந்து வந்தது. அடுத்த இடத்தில் அதிமுக முன்னிலை வகித்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி 1 இடத்தில் முன்னிலை பெற்றது அமமுக, நாம் தமிழர் கட்சி முன்னணி இடங்களில் வரவில்லை.
பிற்பகல் நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அதன்படி திமுக கூட்டணி 153 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. திமுக தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டி எண்ணிகையை பெற்றது. அதிமுக கூட்டணி 80க்கும் அதிகான தொகுதி களிலும் முன்னிலை வகிக் கின்றன.
தொடர்ந்து பல இடங்களில் திமுக அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டு முந்திக் கொண்டிருப்பதால் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதுவொரு சரித்திர சாதனை என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதன் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
திமுக ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து மகிழ்ச்சியை கொண்டாடினர். இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.
கொரோனா தொற்று மற்றும் முழு ஊரடங்கு காரணமாக வெற்றிக்கொண்டாட்டங் களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியி ருந்தது. அதனபடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் அமைதியாக வீடு திரும்பி மகிழ்ச்சியை வீட்டில் கொண்டாட்டங்கள் என்று கேட்டுக்கொண்டார்.