மகாத்மா காந்தியின் 153 – வது பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 46 – வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் அமைந்துள்ள இருபெரும் தலைவர் களின் திருவுருவச் சிலைக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சிதிலகம் ரா.சரத் குமார் மாலை அணிவித்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி னார்கள்.
இயக்கத்தின் மாநில பொருளாளர் ஏ.என். சுந்தரேசன் தலைமையில், சென்னை மண்டலச் செயலாளர் டி.மகாலிங்கம் முன்னிலையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் ஏ.டி..சந்திரபோஸ், பி.எஸ்.முருகேசன், புரசை டி.நாகப்பன், எஸ்.அந்தோணிராஜ், எஸ்.கிருஷ்ணவேணி, மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாலகிருஷ்ணன், எஸ்.குருமூர்த்தி, கிண்டி இரா வேணு, ஆர்.நடராஜ்குமார், ஆர்.எட்ராஜா, ஏ.பொன்வேல், எம்.ஏ.ஆண்டனி, ததையூர் ப ரமேஷ், கார்த்திக், கொப்பூர் எஸ்.முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித் தனர்