படம்: கிழப்பய
நடிப்பு: கதிரேசகுமார், விஜய ரண தீரன், கே. என்.ராஜேஷ், பேக்கரி முருகன் அனுதியா, உறியடி ஆனந்தராஜ்
தயாரிப்பு: யாழ் குணசேகரன்
இசை: கெபி
ஒளிப்பதிவு: அஜித்குமார்
இயக்கம்: யாழ் குணசேகரன்
பி ஆர் ஒ: நிகில் முருகன்
ஜனநடமாட்டம் இல்லாத புறநகர் பகுதியில் பெரியவர் ஒருவர் சைக்கிளில் செல்கிறார். பின்னால் வரும் கார் ஹாரன் ஒலி எழுப்பியும் வழி விடாமல் செல்கிறார்.நீண்ட நேரம் ஒலி எழுப்பியும் வழி விடாமிலிருப்பதுடன் சைக்கிளை ரோட்டின் குறுக்கே நிற்க வைத்து வழி. மறிக்கிறார். காரிலிருக்கும் நபர்கள் கோபம் அடைந்த அந்த பெரியவரை அடித்து துவைப்ப துடன் சைக்கிளை தூக்கி தூர வீசுகிறார்கள். ஆனாலும் அந்த பெரியவர் மீண்டும் அதேபோல் சைக்கிளை நிறுத்திவிட்டு தகராறு செய்கிறார். மீண்டும் அவரை தாக்குகிறார்கள். ஊர்க்கரர்கள் சிலர் வந்து அந்த பெரியவரிடம் எடுத்துச் சொல்லியும் வழிவிட மறுக்கிறார். பெரியவர் ஏன் இப்படி செய்கிறார். காரில் வருபவர்களுக்கும் இவருக்கும் என்ன பிரச்சினை என்பதை கிளைமாக்ஸ் தான் விளக்குகிறது.
இப்படியொரு படத்தை இதுவரை தமிழ் சினிமா பார்த்திருக்க வாய்ப்பில்லை. பெரிய ஹீரோ ஹீரோயின், காமெடி நடிகர்கள் யாரும்.இல்லை , ஊட்டி, கொடைக் கானல், காஷ்மீர் போன்ற லொ கேஷன் கிடையாது. விசில் அடித்து ரசிக்க பாட்டும் கிடையாது ஆனாலும் ஒன்றரை மணி நேரத் துக்கு.மேல்.இருக்கையில் பார்வை யாளர்களை காட்சிகள் கட்டிப் போடுகிறது.
பெரியவராக நடித்திருக்கும் கதிரேசகுமார் சரியான கள்ளுளி மங்கன்தாய்யா என்று எல்லோ ரையுமே முணுமுணுக்க வைத்து விடுகிறார். காரில் இருக்கும் நபர்கள் கூட்டமாக சேர்ந்து தாக்குவது போதாதென்று போன் போட்டு ஆட்களை வரவழைத்தும் தாக்குகிறார்கள்.
மூக்கு, காதில் இரத்தம் வந்த பிறகும் எந்த வார்த்தையும் பேசாமல் தனது மவுன போராட் டத்தை தொடரும்போது ஏதோ ஒரு ரகசியத்தை வெளிக் கொண்டு வரவே பெரியவர் கதிரேசகுமார் இப்படி உயிருக்கு துணிந்து போராடுகிறார் என்பதை கிளை மாக்ஸ் நெருங்க.நெருங்க உணர முடிகிறது. எதற்காக இந்த போராட்டம் என்பதை இங்கு சொன்னால் சஸ்பென்ஸ் உடைந்து போகும் அது இப்போதைக்கு சஸ்பென்சாகவே இருக்கட்டும்.
காரில் வரும் நபர்கள் பெரியவரின் பிடிவாதததில் கடுப்பாகி கிழட்டுப்பய என்று கோபம் கொப் பளிக்க திட்டும்போதும் முறைக்கும் போதும் குபீர் சிரிப்பு வருகிறது.
தனி ஒரு.மனிதன் நினைத்தால் எந்த தவறையும் தடுத்து நிறுத்த.முடியும் என்ற அடிப்படை கருத்தைத்தான் இயக்குனர் யாழ் குணசேகரன் இவ்வளவு அழுத்தமாக எதார்த்தமாக எளிமையாக சொல்லியிருக் கிறார். அவர் சொன்ன கதையை புரிந்து கொண்டு இசை அமைப் பாளர் கெபி , ஒளிப்பதி வாளரர் அஜித்குமார் பொறுமை காத்து ஒத்துழைத்திருக்கின்றனர்.
கிழப்பய – கெட்டிப்பய.