Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அக்டோபரில் திரையரங்குகளில் வெளியாகும் ‘கடைசீல பிரியாணி’

YNOT ஸ்டுடியோஸின் ஒரு அங்கமான YNOTX, கதையம்சம் திரைப்படங்களை சந்தைப்படுத்தி விநியோகிப்பதில் சிறந்து விளங்குகிறது. ‘கடைசீல பிரியாணி’ எனும் கிரைம்-நகைச்சுவை படத்தை YNOTX பெருமையுடன் வெளியிட உள்ளது.

இது குறித்து S.சசிகாந்த் கூறுகையில், “சூப்பர் டீலக்ஸ், பக்கிரி, கேடி மற்றும் வானம் கொட்டட்டும் போன்ற படங்களை தொடர்ந்து, சுயாதீனமாக தயாரிக்கப்பட்ட ‘கடைசீல பிரியாணி’ YNOTX-இன் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் நிஷாந்த் கலிதிண்டி கவனிக்கப்பட வேண்டிய ஒரு திறமைசாலி ஆவார். மேலும், மிக பிரம்மாண்டமான வெளியீட்டிற்கு இந்த படம் தகுதியானது, அதை திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

நிஷாந்த் கலிதிண்டி (இயக்குநர்) கூறுகையில் – “பழிவாங்குவதற்காக கேரளாவுக்குச் செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் பற்றிய கதை தான் ‘கடைசீல பிரியாணி’. இந்த தமிழ் படம் கேரளாவில் உள்ள அழகான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் வெளியான முந்தைய படங்களைப் போலல்லாமல், இது ஒரு தனித்துவமான சுவாரசியமான கதையுடன் கூடிய படமாக இருக்கும்.”

ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களை இயக்கியதில் கிடைத்த அனுபவத்தைப் வைத்து ‘கடைசீல பிரியாணி’ மூலம் திரைப்பட இயக்குநராக நிஷாந்த் கலிதிண்டி அறிமுகமாகிறார்.

அறிமுக இசையமைப்பாளர்களின் குழுவால் இந்த படத்திற்கு இசையமைக்கப்பட்டுள்ளது. இசையை ‘YNOT மியூசிக்’ வெளியிட உள்ளது. இதை பற்றிய அறிவிப்பு வரும் நாட்களில் வெளியிடப்படும்.

‘கடைசீல பிரியாணி’ திரைப்படத்தை அக்டோபர் 2021-இல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘கடைசீல பிரியாணி’ டீசர் வெளியிடப்பட்டுள்ளது:



YNOTX வழங்கும் ‘கடைசீல பிரியாணி’. ஒரு மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் தயாரிப்பு. வசந்த் செல்வம், ஹக்கிம் ஷா, விஜய் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர் நிஷாந்த் கலிதிண்டி இயக்கி, தயாரித்துள்ளார். எஸ். சசிகாந்த் & சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் தயாரித்துள்ளனர். ஒளிப்பதிவு  அஜீம் மொஹம்மத்,  ஹெஸ்டின் ஜோஸ் ஜோசப்.
படத்தொகுப்பு  இக்னேசியஸ் அஸ்வின். இசை  ஜூடா பால், நேய்ல் செபாஸ்டியன்.
பின்னணி இசை  வினோத் தணிகாசலம். ஒலி வடிவமைப்பு  வினோத் தணிகாசலம், ஜிதின் மோனி. டால்பி அட்மோஸ் மிக்ஸ் சுரேன் ஜி. டிஐ  நிஷாந்த் கலிடிண்டி, ஆர்யன் மௌலி.
வி எஃப் எக்ஸ்  நாக் ஸ்டுடியோஸ்  விக்னேஸ்வரன் இளங்கோ.
விளம்பர வடிவமைப்பாளர்  சிவகுமார் எஸ் (சிவா டிஜிட்டல் ஆர்ட்).
மக்கள் தொடர்பு  நிகில்.

 

Related posts

தனுஷுக்கு ரெட் கார்ட் ஏன்? கே ஆர் பரபரப்பு அறிக்கை

Jai Chandran

Actress Dushara Vijayan’s unforgettable skydiving experience

Jai Chandran

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய விஜய் தேவரகொண்டா- சமந்தா ‘குஷி’ பட இசை நிகழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend