Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூப்பரான ஆந்தம் பாடலுடன் ஹனு மான்

சூப்பர் மேன் ஹனு-மான் சூப்பரான ஆந்தம் பாடலுடன் வந்துள்ளார் !! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகி யுள்ளது !!

சூப்பர் ஹீரோ திரைப்படங் களை ரசிக்கும் இந்திய ரசிகர்கள், நமது மண்ணின் சூப்பர் ஹீரோ வான ஹனு-மானை திரையில் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கின் றனர் ஆர்வமாக உள்ள னர். திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருக்கும் இப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு மாதங் களே உள்ளன. இந்நிலை யில் இயக்குநர் பிரசாந்த் வர்மா படம் குறித்தான விளம்பரங்களிலும் தன் தனித்திறமையைக் காட்டி வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் சாலிசா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக் குழு குழந்தைகள் தின மான இன்று அவர்கள் கொண்டாடும் வகையில், ஹனு மான் சூப்பர் மேன் பாடலை வெளியிட்டுள் ளனர்.

சூப்பர் ஹீரோ ஹனு மானின் இரண்டாவது தனிப்பாடலை வெளியிட, படக்குழு ஏன் குழந்தைகள் தினத்தைத் தேர்ந்தெடுத் தது என்று பலரும் ஆச்சரி யப்பட்டனர். ஆனால் இப்பாடலைப் பார்த்த வுடன் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். சூப்பர் ஹீரோ ஹனுமான் வேடிக்கையானவர், அதே நேரத்தில் சாகசக்காரர். அனுதீப் தேவ் உடைய அற்புத இசையில், மதுர கவி பாடல் வரிகளில், ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி குரல்களில், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விக் கும் பாடலாக இப்பாடல் வந்துள்ளது. காமிக் வடிவத்தை ஞாபகப் படுத்தி, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஹனு மானின் சாகசங்களை சொல்லும் இப்பாடலை, குழந்தைகள் அனைவரும் விரும்புவார்கள். இந்த சூப்பர் கீதம் வெளியான வேகத்தில் அனைவரும் கொண்டாட பெரும் ஹிட்டடித்துள்ளது.

பிரைம்ஷோ என்டர்டெ யின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத் தைப் பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளரா கவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளரா கவும் பணியாற்றுகின் றனர். இந்த பிரம்மாண்ட மான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்கிறார், ஸ்ரீநாகேந் திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தில் தேஜா சஜ்ஜா வுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனா கவும், வரலட்சுமி சரத் குமார் முக்கிய கதாபாத் திரத்திலும் நடிக்கி றார்கள்.

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படம் ஹனு-மான் ஆகும். இக்கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப் பட்டுள்ளது. படத்தின் கான்செப்ட் உலகளாவி யதாக இருப்பதால், உலகம் முழுவதும் சிறப் பாக வரவேற்கப்படும் சாத்தியம் உள்ளது.

ஜனவரி 12, 2024 அன்று தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலை யாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகள் உட்பட ஹனு- மான் திரைப்படம் பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: கே நிரஞ்சன் ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
வழங்குபவர்: ஸ்ரீமதி சைதன்யா
திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே (Scriptsville)
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
இசையமைப்பாளர்கள்: அனுதீப் தேவ், ஹரி
கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சௌரப்
எடிட்டர்: எஸ்.பி.ராஜு தலாரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி வரி
தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
லைன் புரடியூசர்: குஷால் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திர தங்காலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடை வடிவமைப்பாளர்:
லங்கா சந்தோஷி

Related posts

பூர்வகுடி மக்களை வாழ்விடங்களிலிருந்து அகற்றுவதா?

Jai Chandran

ராகவா லாரன்ஸின் ” துர்கா ” படத்தை இயக்கும் அன்பறிவ்

Jai Chandran

கசட தபற வெற்றி, இயக்குனர் சிம்புதேவன் அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend