படம்: குட் டே
நடிப்பு: பிரித்திவிராஜ் ராமலிங்கம்
காளி வெங்கட்
மைனா நந்தினி
ஆடுகளம் முருகதாஸ்
பகவதி பெருமாள் (பக்ஸ்)
வேல ராமமூர்த்தி
போஸ் வெங்கட்
விஜய் முருகன் (கலை இயக்குனர்)
ஜீவா சுப்பிரமணியம்
பாரத் நெல்லையப்பன்
தயாரிப்பு: பிரித்திவிராஜ் ராமலிங்கம்
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: மதன் குண தேவ்
இயக்கம்; என் அரவிந்தன்
பிஆர்ஓ: சதீஷ் (AIM), சிவா
திருப்பூரில் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்யும் பிரித்விராஜ் ராமலிங்கம் கம்பெனியில் முதலாளி மற்றும் மேனேஜரின் கோபத்துக்கு ஆளாகி குடிகாரன் ஆகிறார். அதன் பிறகு அன்று இரவு முழுவதும் அவர் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார். கல்லூரியில் உடன்படித்த தோழி வீட்டுக்கு சென்று வம்பு செய்கிறார், போலீஸிடம் சிக்கி அங்கிருந்து வாக்கி டாக்கியுடன் தப்பித்து பல இடங்களுக்கு சுற்றுகிறார். அன்று ஒரு இரவில் அவர் வாழ்வின் எல்லா துன்பங்களையும் அனுபவிக்கிறார் அதன் பிறகு நடந்தது என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.
ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் என் அரவிந்தன். பல படங்களில் தற்போது பாடல்கள் எழுதி வரும் கார்த்திக் நேத்தா வாழ்வின் கதையாக இக்கதை அடித்தளம் அமைந்திருக்கிறது. அவரே படத்திற்கு பாடலும் வசனமும் எழுதி இருக்கிறார். சொல்லப்போனால் ஒரு காட்சியில் மின்னல் வேகத்தில் நடித்துவிட்டு உதட்டில் சிரிப்பையும் ஒட்ட வைத்து விட்டு செல்கிறார்.
பிரிதிவிராஜ் ராமலிங்கம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருப்பத்துடன் படத்தையும் தயாரித்து இருக்கிறார்.
நடிப்பு என்றால் குடித்துவிட்டு அலப்பறை செய்யும் அவரது அட்டூழியம் எல்லை மீறி செல்கிறது
.
கல்லூரியில் உடன்படித்தார் என்பதற்காக திருமணமாகி குழந்தையுடன் இருக்கும் தோழியின் வீட்டுக்குச் சென்று அவரது கணவர் கண் எதிரிலேயே தோழியை கேக் வெட்ட சொல்லி செய்யும் அட்ராசிட்டி யாராக இருந்தாலும் கோபத்தைத்தான் வரவழைக்கும். பிரித்விராஜ் செய்யும் அட்டூழியம் கடுப்பேற்றுகிறது.
போலீஸ் உடுப்பையும், வாக்கி டாக்கியும் திருடிக் கொண்டு ஓடும் பிரிதிவிராஜ் மீது அந்த இன்ஸ்பெக்டர் கோபத்தை கொஞ்சம் தான் வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையில் இந்த சம்பவம் நடந்திருந்தால் ஹீரோவாக இருந்தாலும் சரி, சராசரி நபராக இருந்தாலும் சரி அந்த இன்ஸ்பெக்டர் கை காலையாவது உடைத்திருப்பார்.
குழந்தை திருட்டை மையமாக வைத்து ஒரு கருத்தை இந்த படம் பேசியிருக்கிறது. அந்த ஒரு சென்டிமென்ட் காட்சி தான் பிரித்விராஜ் ராமலிங்கம் செய்யும் அத்தனை அட்ராசிட்டிகளையும் பொறுத்துக் கொள்ள வைக்கிறது.
குடிகாரன் திருந்த வேண்டும் என்ற கருத்தை சொல்ல வந்துவிட்டு தொடக்கம் முதல் இறுதி வரை ஹீரோவை குடிகாரனாகவே காட்டிவிட்டு அந்த குடிமூலம் ஒரு நல்ல காரியத்தையும் அவர் செய்தார் என்று காட்டும் போது குடிப்பழக்கம் நல்லது என்று சொல்ல வருகிறாரா அல்லது குடிக்காதே என்று சொல்ல வருகிறாரா என்பது குழப்பமாகி விடுகிறது.
ட்ரீம் வாரீயர்ஸ் நிறுவனம் நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிடும் என்று ஒரு கருத்து இருந்தாலும் அவர்களது தேர்வும் சில சமயம் தவறாகி விடுகிறது என்று அவ்வப்போது தோன்றுகிறது. இது படங்களை தேர்வு செய்யும் டீமுக்குள் ஏற்பட்ட குழப்பமோ என்று எண்ணத் தோன்றுகிறது
கோவிந்த் வசந்தா இசை ஓரளவுக்கு படத்தை தாங்கி பிடிக்கிறது
மதன் குண தேவ் ஒளிப்பதிவும் இரவு சூழலை அரங்கிற்குள் ஏற்படுத்தித் தருகிறது.
குட் டே – குடிப்பவர்களை இரண்டு ரவுண்ட் எக்ஸ்ட்ரா போட வைக்கும்.

