படம்: கால் டாக்ஸி
நடிப்பு: சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், ஈ.ராமதாஸ், கணேஷ் ஆர்த்தி, பசங்க சிவகுமார், சந்திரமவுலி, திலீபன், சேரன்ராஜ், அஞ்சலிதேவி
தயாரிப்பு: கே டி கம்பைன்ஸ் ஆர் கபிலா
இசை: பாணர்
ஒளிப்பதிவு: எம்.ஏ.ராஜதுரை
இயக்கம்: பா.பாண்டியன்
நகரில் கால் டாக்ஸி டிரைவர் கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு அவர்களின் கார்கள் திருடப் படுகின்றன. இதை செய்யும் கொள்ளை கும்பல் யார் என்று தெரிந்தும் அதுபற்றி போலீஸ் கண்டும் காணாமலிருக்கிறது. தனக்கு வரும் சவாரி ஒன்றை தனது நண்பருக்கு தருகிறார் ஹீரோ சந்தோஷ். அந்த காரில் போதை பொருளை ஒரு கும்பல் கடத்துகிறது. இதை தெரிந்துக்கொண்ட கால் டாக்ஸி டிரைவர் தனது நண்பர் சந்தோஷுக்கு போன் செய்து சொல்ல முயல ரவுடிகள் டிரைவரை அடித்துக் கொள்கின்றனர். தான் கொடுத்த சவாரியை எடுத்து சென்றதால் நண்பன் இறந்து விட்டான் என்பதால் வேதனை அடையும் சந்தோஷ் நண்பனை கொன்ற கடத்தல் கூட்டத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அவரால் அந்த கூட்டத்தை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
கடந்த சில வருடங்களுக்கு நடந்த உண்மை சம்பவங்க ளை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டி ருக்கிறது. கால் டாக்ஸிகளில் சவாரி செல்லும் ரவுடிகள் தனியான இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி அவர்களை கொன்றுவிட்டு காரை திருடி செல்வதும் பிறகு அந்த காரை வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று திருட்டு கும்பல் விற்பதையும் தோலுரித்து காட்டி இருக்கின்றனர்.
கால்டாக்ஸி கடத்தல் கொலைக்கு நடுவில் ஒரு காதல் லைனையும் இணைத்து கதையை சுவாராஸ்யமாக்கி இருக்கிறார்கள்.
கால் டாக்ஸி டிரைவராக வரும் ஹீரோ சந்தோஷ் சரவணன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஹீரோ என்ற போர்வையில் 50 பேரை அடித்த் சாய்த்து ஹீரோயிஸத்தை நிரூபிக்கா மல் இயல்பான செயல்களால் கடத்தல் கூட்டத்தை பிந்தொடர்வது, அவர்களிடம் போராடுவது, மோதுவது என மனதில் இடம் பிடிக்கி றார்.
அஸ்வினி சந்திரசேகருடனும் காதல் காட்சிகளில் அளவுடன் நடித்திருக்கிறார் சந்தோஷ். நண்பனை கொன்ற கடத்தல் கூட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியிலிருக்கும்போது காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருப் பது பாராட்டத்தக்கது.
ஹீரோயின் அஸ்வின் சந்திர சேகரும் அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் யாதார்த்தமான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார். கால் டாக்ஸி டிரைவரை காதலிப்பதாக தன் அப்பாவிடம் அஸ்வினி சொல்ல அடுத்து ரணகளம் நடக்கும் என்று எதிர்பார்த் தால் அப்பாவும் மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டி பாங்காக நடந்துகொள் வதில் பண்பு வெளிப்படு கிறது.
கால்டாக்ஸி டிரைவர்கள் குடும்பத்துக்காக இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் விதத்தை தெளிவாக எடுத்துச் சொல்லி சென்டிமென்ட் டச் செய்கிறார் இயக்குனர்.
எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாணர் பாடல் இசை ஒ கே ரகம்.
கால் டாக்ஸி டிரைவர்களை மையமாக வைத்து கதையை பின்னி இருக்கும் இயக்குனர் பா.பாண்டியன் மற்ற விஷயங் களை ஊறுகாய்போல் தொட்டுக்கொண்டு சொல்ல வந்த விஷயத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறார். கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.
கால் டாக்ஸி- விழிப்புணர்வு.
previous post