Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஏஞ்சலினா ஜோலியின் கரிசனம்..

..

குழந்தைகள் பசி தீர ரூ 7 கோடி நன்கொடை..

ஹாலிவுட் நடிகைகள் என்றதும் யார் மீது மீ டூ புகார் கூறுவார்களோ என்று தான் எண்ணத் தோன்றும் அந்த எண்ண ஓட்டத்தையே மாற்றி அமைத் திருக்கிறார் ஏஞ்சலினா ஜோலி.
ஒரிஜினல் சின், ஹெல்ஸ் கிச்சன் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். கொரோனோ வைரசலிருந்து தப்பிப்பது எப்படி என்று தான் எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கிறோம் இவரோ பசியால் வாடும் குழந்தைகள் பற்றி யோசித்திருக்கிறார். கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் எல்லாமே அலுவலகம் முதல் அங்காடி வரை மூடப்பட்டிருப்பதால் வேலை யிழந்து ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவார்கள் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களின் குழந்தைகளும் ஆதரவற்ற குழந்தைகளும் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கின்றன. பட்டினியால் வாடும் குழந்தைகளுக்கு நோ கிட் ஹங்ரி சேவை அமைப்பு உணவு வழங்கி வருகிறது.
அந்நிறுவனத்துக்கு ஏஞ்சலினா ஜோலி 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது நம்மூர் மதிப்பில் 7 கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார்.

‘கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 100 கோடி குழந்தைகள் உணவில்லாமல் பசியால் வாடுகின் றனர். அமெரிக்காவில் மட்டும் 2 கோடி குழந்தைகள் உணவின்றி பட்டினி கிடக்கின்றன. நோ கிட் ஹங்கரி அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது’ என தெரிவித்துள்ளார் ஏஞ்சலினா.

#Angelina Jolie Donates $1 Million to No Kid Hungry Amid Coronavirus

Related posts

Director K.Bhagyaraj Appreciated the Actor, Director UDHAYAA

Jai Chandran

வி ஆர் ஆர் இயக்கும் “கெத்துல” ஆடியோ ரிலீஸ்..

Jai Chandran

Hollywood stars arrived by colourful auto rickshaw

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend