Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

மதிமாறன் ( பட.விமர்சனம்)

படம்: மதிமாறன்

நடிப்பு: வெங்கட்.செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை, சுதர்சன் கோவிந்த், பிரவின் குமார்

தயாரிப்பு: ஜி எஸ்.சினிமா.இண்டர்நேஷனல்

இசை: கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு: பரவேஸ்

இயக்கம்: மந்திர வீரபாண்டியன்

பி ஆர் ஒ: யுவராஜ்

உடல் குறைபாட்டை கேலி பேசுபவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் தன்னபிக்கை தரும் உன்னதமான படம் என்ற ஒரு.பாராட்டை இப்படத்துக்கு முதலில் தெரிவித்து விடலாம்

கிராமத்து.போஸ்ட்மேனுக்கு (எம் எஸ்.பாஸ்கர்) ஒரே.பிரசவத்தில் ஆண் , பெண் குழந்தை என  இரட்டை பிள்ளைகள் பிறக்கின் றன. மாறன் (வெங்கட் செங்குட்டுவன்) மதி ( இவானா) என்று பெயர் வைக்கின்றனர். குழந்தைகள்  வளர வளர பிரச்னையும் வளர்கிறது. மதி சராசரி உயரமாக வளர்கிறான். மாறன் வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டு உயரமாக வளராமல் 3 அடி மட்டுமே வளர்கிறான்.  இதனால் எல்லோரும் அவனை குள்ளன்  குட்டை  லில்லிபுட் என்று கிண்டல் செய்கின்றனர்.  அதைக்கேட்டு மனம் வருந்தினாலும் தந்தை சொன்னபடி எதையும் காதில் வாங்காமல் மாறன் புத்திசாலியாக வளர்கிறான். இந்நிலையில் மதி வீட்டை விட்டு காதலனுடன் ஓடுகி றாள். இதில் தாய் தந்தை தற்கொலை செய்து இறக்கின் றனர். மனம் வெறுத்த  மாறன் கால்.போன போக்கில் செல்கி றான். ஒரு கட்டத்தில் மதியை சந்திக்கிறான். திடீரென்று  கதை கிரைம் சப்ஜெக்ட்டாக மாறுகிறது. ஊரில் பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகின் றனர். அதை துப்பு துலக்க முடியாமல்.போலீஸ் தவிக்கிறது ஏற்கனவே தன் மீது ஆசைபட்ட சகமாணவி போலீஸாக இருக்கி றாள். அவளை மாறன் சந்திக்க்கச் செல்கிறான். அப்போது ஊரில் நடக்கும் மர்ம கொலைகள் பற்றி தெரியவர அதுபற்றி மாறன் துப்பு கொடுக்கிறான். அதைக்கேட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்  கோபம் அடைகிறார். மாறனை துரத்தி அடிக்கிறார். விடாப்பிடியாக இந்த வழக்கில் மாறன் துப்பறிகிறான்  மர்ம கொலைக்கு விடை கிடைத் ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

பல படங்கள் காப்பி பேஸ்ட் படங் களாக வரும் நிலையில் புதிய களத்தில் கதை வருவதென்பது வியப்பானவே விஷயமாகிவிட்டது. அந்த வகையில் மதி மாறன் வியப்பும், வித்தியாசமும் கொண்ட படைப்பு என்பதில் சந்தேக மில்லை.

மாறனாக நடித்திருக்கும் 3 அடி உயர நடிகர் வெங்கட் செங்குட்டுவன் ஒரு சில 6 அடி உயர நடிகர்கள் கூட நடிக்க முடியாத நடிப்பை வெளியிட்டு ஆச்சரியப்பட வைக்கிறார். உயர. குறை இருக்கிறது என்று படம் பார்ப்பவர்கள்தான் பரிதாப்படு கிறார்களே தவிர மாறன் அதுபற்றி கவலைபட்டதுபோல் தெரிய வில்லை ஒவ்வொரு காட்சியையும் தான்தான் ஹீரோ என்ற தன்னம்பிக்கையுடன் நடித்து அசத்துகிறார்.

லவ் டுடே இவனாவுக்கும் நல்ல பாத்திரம். தன் தம்பியை குள்ளன்  என்று சொல்பவர்களை நின்னு மிரட்டும் போது.மனதில் இடம் பிடிக்கிறார் .

போஸ்ட் மேனாக வரும்  எம் எஸ்.பாஸ்கர் தான் சிறந்த நடிகர் என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.

கொலை வழக்கில் துப்பறியும் காட்சி எல்லாம் நுணுக்கமாக படமாக்கப்பட்டிருப்பது படத்தை  வேகம் எடுக்கச் செய்கிறது.

கார்த்திக்ராஜாவா இப்படியொரு இசை தந்திருக்கிறார் என்ற மற்றொரு வியப்பும்.படத்துக்கு பெரிய பிளஸ். பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது. ஆங்காங்கே ஒலிக்கும் கார்த்திக்ராஜாவின் குரல் இளையராஜா வாய்ஸ் என்று எண்ணும்  அளவுக்கு காந்தமாக மனதை  ஈர்க்கிறது.

ஜி எஸ்.சினிமா.இண்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது.

பரவேஸ் கேமிரா ரம்மியத்தையும் கிரைம் சீனையும் ரசனை கெடாமலும், பயமுறுத்தலும் இல்லாமல் படமாக்கி.இருக்கிறது.

மதிமாறன் – மாஸ் இல்லாவிட் டாலும் மவுசு உள்ள படம்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

SRK Unveils Teaser of ‘Hayyoda’

Jai Chandran

நாட்படு தேறல் – தலைப்புப் பாடல் வைரமுத்து வெளியிட்டார்

Jai Chandran

ஏவிஎம் புரொடக்ஷ்ன்ஸ்-சோனி லிவ் இணையும் “தமிழ் ஸ்டாக்கர்ஸ்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend