Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமி சபதம் இலவசமாக ஆன்லைனில் வாசிக்க அனுமதி

நண்பர்களே!

கோரோனாவால் பொழுது போகாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி.

கல்கி பத்திரிகையின் நிறுவனத்தினர் தங்களது இணையத்தளத்தில் 1943-ம் ஆண்டு முதல் -2010-ம் ஆண்டு வரையில் வெளியான கல்கி இதழ்கள், மற்றும் தீபாவளி மலர்கள் போன்ற சிறப்பு மலர்கள் அனைத்தையும் இலவசமாக வாசிக்க அனுமதியளித்துள்ளார்கள்.

‘பொன்னியில் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ போன்ற நாவல்களையெல்லாம் ஓவியர் மணியம், ஓவியர் வினு ஆகியோரின் ஓவியங்களுடன் மீண்டும் வாசிக்க முடிவது மகிழ்ச்சியை அளிப்பது.

இது போல் மீ.ப.சோமுவின் ‘கடல் கண்ட கனவு’, ‘வெண்ணிலவுப் பெண்ணரசி’, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’, ‘கயல்விழி’, ‘வெற்றித்திருநகர்’ , நா.பார்த்தசாரதியின் ‘மணி பல்லவம்’, ‘பாண்டிமாதேவி’ . கி.ராஜகோபாலனின் சரித்திர நாவல், கெளசிகனின் ‘பாமினிப்பாவை’, கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ , ஜானகிராமனின் ‘அன்பே ஆரமுதே’ போன்ற நாவல்களையெல்லாம் அத்தியாயங்களைத் தொகுத்து மின்னூல்களாக்கி வைத்துள்ளார்கள். அவற்றையும் இலவசமாக வாசிக்கலாம்.

மின்னூல்கள்: https://www.kalkionline.com/publication/fpubbook.php

கல்கி இதழ்கள் (1943 – 2010): https://www.kalkionline.com/archivessale/readers1.php

அமிர்தம் சூர்யா
தலைமை உதவி ஆசிரியர்,
கல்கி வார இதழ்.

Related posts

தலைவர் 173 பட இயக்குநர் அறிவிப்பு..

Jai Chandran

பிரிட்டிஷ் அகடமி ‘பாப்டா’ தூதராக ஏஆர்.ரஹ்மான் நியமனம்.

Jai Chandran

மாநாடு (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend