Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

60 பேர்களுடன் நாளை முதல் டிவி படப்பிடிப்பு தொடங்க அனுமதி.

60 பேர்களுடன் நாளை 31ம் தேதி முதல் டிவி படப்பிடிப்பு தொடங்க அனுமதி.

முதல்வர் அறிவிப்பு..

கொர்ரோனா தடையால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிவி படப்பிடிப்பை நடிகர், நடிகர் உல்லிட்ட 60 பேர்களுடன் நாளை முதல் தொடங்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (ஸ்டெப்ஸ்) கோரிக்கையை ஏற்று சில நிபந்த னைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்குவதற்கு 21. 5. 2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன்.
அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தி துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தி துறை அமைச்சர் என்னுடன் கலந்தாலோசித்தார். மேற்படி சங்கத்தினர் கோரிக்கை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர் நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31. 5. 2020 (நாளை) முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் பிற மாவட்டங் களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப் பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழு படப்பிடிப்பும் ஒருமுறை மட்டும் அனுமதி பெறுதல் வேண்டும். சின்னத்திரை படப்பிடிப் பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பா ளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப் பிடிப்புகள் நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
#டிவி ஷூட்டிங் #எடப்பாடி பழனிசாமி
#Tamil Nadu govt allows TV serials to resume shooting from 31st May

Related posts

Kabilan Vairamuthu video booklet launched

Jai Chandran

லிங்குசாமி இயக்கத்தில் ராம் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி..

Jai Chandran

“டேக் டைவர்ஷன்” நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்: இயக்குனர் பேரரசு பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend