3வது ஊரடங்கு: அடுத்த 21 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி கிடையாது..
உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..
புதுடெல்லி, மே 1:
கொரோனா தொற்று எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதை பச்சை, ஆரஞ்சு சிவப்பு என்ற மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு மே 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை என 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வண்ண மாவட்டங் களுக்கு ஏற்ப விதிமுறைகள் அறிவிக் கப்பட்டிருக்கின்றன.
அடுத்த 21 நாள்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது.
பச்சை மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பேருந்துகளை இயக்கலாம். மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.
சிவப்பு மாவட்டங்களில் தளர்வு கிடையாது. அதே சமயம் சிவப்பு மாவட்டத்தில் நகர பகுதிகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் ஆலை கள் இயக்க அனுமதிகப்படும். தனியார் அலுவலங்களில் 33 சதவீத பணியாளர் களுடன் இயக்கலாம்.
ஆரஞ்சு மாவட்டங்களில் ஒரு பயணியுடன்தான் வாடகை காரை இயக்க முடியும்
நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் நாடுமுழுவதும் தொடரலாம்.
சாலை, ரயில், விமானம் என பயணிகள் போக்குவரத்து சேவைக்கு அனுமதி கிடையாது. சரக்கு போக்கு வரத்து தொடங்கலாம். இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி கள் வீட்டை விட்டு வெளிவரக் கூடாது.
இந்தியா முழுவதும் சிவப்பு மண்டலம் 130, ஆரஞ்சு மண்டலம் 284, பச்சை மண்டலம் 119 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
இதனை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
#3rd lockdown new rules annonced