Trending Cinemas Now
அரசியல்

மு..க ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்..

ஒளிவு மறைவு இல்லாமல் புள்ளி விவரம்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக் கிறார்.அதில் அவர் கூறியிருப்பதாவது

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று முதன்முதலாக கேரளாவில் வந்தபோதே, தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகின்றது.

நோய்த் தொற்று சம்பந்தமாக நாள்தோறும் நடைபெறும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளி விவரங்களை stopcorona.tn.gov.in என்ற பிரத்யேக வலைதளத்தில் எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளியிடப்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகள் தினமும் ஊடகங்களுக்கு நேரடியாக புள்ளிவிவரங்களை கூறி வருகின்றார்.  இது பொது மக்களிடையே விழிப்புணர்வையும்,அரசின் மீதான நம்பகத்தன்மையையும் அதிகரித்துள்ளது.

அதே போல, வேறு எந்த மாநிலங்களும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னரே, தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்தது, சர்வதேச பயணிகளை விமான நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தி கண்காணிப்பில் வைத்தது. அதன் தொடர்ச்சியாக மாநில எல்லைகள் மூடப்பட்டது, 15.3.2020 முதல் பொது இடங்களில் கூடத் தடை உத்தரவு, பூந்தமல்லி, திருச்சிராப்பள்ளி, கோயம் புத்தூர் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் வசதிகள் என பல்வேறு நடவடிக்கைகளை மிகச் சரியான நேரத்தில் மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வந்ததை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அவர்களே பாராட்டியுள்ளார்கள். 
 
சீனாவில் உள்ள ஊகான் மாகாணத் தில் இந்நோய்த் தொற்று உள்ளது என்று அறிந்தவுடனேயே, ஜனவரி மாதத்திலேயே இந்நோயினைக் கண்டறியும் பரிசோதனைக் கருவிகள், முழு உடல் கவச உடைகள், மருந்துகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய ஆணை வழங்கிய தீர்க்கதரிசியான அரசு தமிழக அரசாகும்.

இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 969 ஆகும்.  நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் பொருட்டு, வீடு வீடாக கண்காணிப்பு நடத்துவதற்கான விரிவான உள்ளூர் கட்டுப்பாட்டு திட்டம் (Containment Zone) செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென தமிழகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் பணியாளர்கள் இப்பணி களில் ஈடுபடுத்தப்பட்டு, இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளில் உள்ள சுமார் 59 லட்சம் மக்கள் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
  
ஒவ்வொரு உயிரும் விலை மதிக்க முடியாதது என்று கோட்பாடு உடைய தமிழக அம்மாவின் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 32 ஆயிரத்து 371 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத் தப்பட்ட பிரிவுகளும், 3,371 வெண்ட்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைத் துள்ளதுடன், தற்சமயம் 20 சோதனை மையங்களை யும் குறுகிய காலத்தில் செயல் பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.  மேலும், எதிர்கால திட்டமிடலுக்காக, ஒரு லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட 5,713 தனிமைப்படுத்தும் கட்டடங்கள், அரசு மற்றும் தனியார் துறை கட்டடங்களில் கண்டறியப்பட்டு உள்ளன.  
போதுமான அளவிற்கு மூன்றடுக்கு முக கவசங்கள், என்-95 முக கவசங்கள் மற்றும் PPE முழு கவச உடைகளும் இருப்பில் உள்ளன.
  
இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத் துவதோடு நில்லாமல், மருத்துவர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, புதியதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,558 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பணி ஓய்வு பெறும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், களப் பணிகள் ஆற்றுவதற்காக  334 சுகாதார ஆய்வாளர்களும், 1,565 ஒப்பந்தப் பணியாளர்களும், 2,715 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களும் தற்காலி கமாக பணியமர்த்தப்பட்டுள் ளனர்.

இந்நோய்த் தொற்றை தடுக்கும் பணியில், தன்னலம் கருதாமல் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து களப் பணியாளர்களுக்கும், தேவைப்படும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள் ளன. மேலும், இப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் கூடுதலாக வழங்கப்படும் என மாண்புமிகு அம்மாவின் அரசு அறிவித்துள்ளது.  

அது மட்டுமல்லாமல், களப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கான முழு மருத்துவச் செலவினையும் தமிழக அரசே ஏற்பதுடன், 2 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்கும்.  துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் நேருக்கையில் ரூ.10 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியின் மூலம் நிவாரணம் வழங்கவும், அவர்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு, 12 மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுக்களை அமைத்து, நோய்த் தொற்று தடுப்பு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளை கண்காணிப்பதுடன், தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில் பொது மக்க ளுக்கு ஏற்படக் கூடிய சிரமங் களுக்கு தீர்வு கண்டும் வருகிறது.  ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது சம்பந் தமாக மருத்துவ வல்லுநர் களின் குழுக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் 10.4.2020 அன்று நடத்தப் பட்டு, அவர்களின் பரிந்துரை கள் பெறப்பட்டுள்ளன.  அப்பரிந்துரைகள் இன்று (11.4.2020) அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

24.3.2020 அன்று மாலை 6 மணி முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.  ஆனால், ஊரடங்கினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைகளையும் வகையில், இந்தியாவி லேயே முதன்முதலாக, ஊரடங்கு அமலுக்கு வரும் முன்னரே, கொரோனா சிறப்பு நிவாரணத் தொகுப்பினை 3,280 கோடி ரூபாய் செலவில் அறிவித்து, அதனை உரிய நேரத்தில் அளித்து, பொது மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்த அரசு, தமிழக அரசு தான்.  

அது மட்டுமன்றி, 35.89 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கூடுதலாக 1,000 ரூபாய் நிவாரணமும் அறிவித்து ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திய அரசு, தமிழக அரசு.  

மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியத்தை வழங்க ஆணையிட்டதும், தமிழக அரசு தான்.  நாளொன்றுக்கு சுமார் 6 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலை யில் அம்மா உணவகத்தில் சுகாதாரமான உணவினை வழங்கி வருவது தமிழக அரசு தான்.  

வேளாண் பெருமக்களின் விளைபொருட்களை குளிர்சாதனக் கிடங்குகளில் வைத்து, பாதுகாத்து, உரிய விலை கிடைக்கும் வகை யில், அதற்கான கட்டண விலக்கும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய் வதற்கு சந்தைக் கட்டணத் திற்கு விலக்கு அளித்த அரசும் தமிழக அரசு தான்.

சட்டமன்ற உறுப்பினர்களிட மிருந்து பிடித்தம் செய்யப் படும் தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே பயன்படுத் தப்படுகிறது.  இன்று தமிழகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சனையான கரோனா தொற்று பரவு வதை தடுக்கும் பணிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் நிதி பயன்படுத்துவதை வரவேற்காமல், அதற்கு கண்டனம் தெரிவிப்பது இவர்களின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

தமிழ்நாடு அரசுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 510 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  இது மட்டு மன்றி, 48 கோடியே 24 லட்சம் ரூபாயினை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கரோனா தடுப்பு நடவடிக்கை களுக்காக மத்திய அரசு வழங்கியுள்ளது.  மேலும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 312 கோடியே 64 லட்சம் ரூபாயினை கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவுவது கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
  
மேலும், நமது திறமை வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் முயற்சி யால், தமிழ்நாட்டில் இறப்பு விகித மும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.  இதற்கு பிரதமர் அவர் களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத் துறைச் செயலர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதிகளைத் தவிர, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொளளவும், சிகிச்சை அளிக்க வும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கடிதம் மூலமும், பிரதமர் அவர்களிடம் காணொலிக் காட்சி மூலமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசு எதுவும் செய்ய வில்லை என்பதைப் போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில், இந்த அரசின் மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டு களையும் இத்தருணத்தில் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளது வருத்தம் அளிக் கிறது; இது அவரது சந்தர்ப்பவாத அரசியலையே காண்பிக்கிறது.

இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TM CM Reply To MK.Stalin

Related posts

முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது: வி.செ.குகநாதன்

Jai Chandran

விஜய் ஸ்ரீ ஜி. இயக்கும் ‘பவுடர்’ படத்தில் அறிமுகமாகும் நிகில் முருகன்

Jai Chandran

5 வருடத்துக்கு பிறகு ரீ என்ட்ரி ஆகும் ஜீவன்; 5 மொழியில் ’பாம்பாட்டம்’..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend