படம்: மாயநதி
நடிப்பு: அபி சரவணன், வெண்பா, அப்புக்குட்டி, ஆடுகளம் நரேன்
தயாரிப்பு: ராஜி நிலா முகில் பிலிம்ஸ்
இசை பவதாரிணி ராஜா
ஓளிப்பதிவு ஸ்ரீனிவாஸ்
இயக்குனர் அசோக் தியாகராஜன்
பள்ளி ஆசிரியர் ஆடுகளம் நரேன் மகள் வெண்பா மீது பாசம் கொட்டி வளர்க்கிறார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை மகள் மனதில் பதியச் செய்து அவரை பிளஸ் 2விலும் கண்ணும் கருத்துமாக படிக்கச் சொல்லி உற்சாக மூட்டுகிறார். வெண்பாவை பள்ளிக்கு கூட்டிச் சென்று விடுகிறார் ஹீரோ அபி சரவணன். வெண்பா மீது அபி காதல் கொள்கிறார். இதற்கிடையில் வெண்பாவை மற்றொருவரும் காதலிக்கிறார். காதலை ஏற்க மறுத்ததால் அவர் மீது ஆசிட் ஊற்ற முனைகிறான். அதை அபி தடுக்கிறார். இதில் அபி சரவணன் மீது வெண்பாவுக்கு காதல் பிறக்கிறது. மகள் காதலில் விழுந்து படிப்பை கோட்டைவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு அறிவுரை சொல்லி பக்குவப்படுத்துகிறார். அபியின் காதல் வலையில் வெண்பா விழுகிறாரா? தந்தையின் சொல்படி படிப்பில் தலைநிமிர்கிறாரா என்பதற்கு எதிர்பாராத விடையளிக்கிறது கிளைமாக்ஸ்.
பள்ளிகாதல் பட வரிசையில் வந்திருக்கும் படம் என்பதால் இது பக்குவப் பட்ட காதலாக இருக்குமா? அல்லது வெறும் இன கவர்ச்சியா என்பதை இயக்குனர் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஆனாலும் பெற்றோர் பேச்சை கேட்காமல் காதல் வலையில் விழுந்தால் எப்படிெயல் லாம் பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.
சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்ட அபி சரவணன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வெண்பா மீது காதல் கொள்வதும் எங்கே தன்னைவிட்டு பிரிந்துசென்றுவிடுவாரோ என்ற சுயநலத்தில் அவரை அவசரமாக திருமணம் செய்வது என தடாலடியான செயல்களில் ஈடுபட்டு ஷாக் தரும் அபி ஆட்ேடா ஓட்டுனராக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வெண்பாவின் நடிப்பு பாத்திரத்துக்கு உயிர்கொடுக்கிறது. அவரை எப்படியா வது படிக்க வைத்து உயர்ந்த நிலைக்கு மகளை கொண்டு வரவேண்டும் என்று கண்ணும் கருத்துமாக வளர்க்கும் தந்தை நரேன் சராசரி தந்தையாக பிரகாசிக்கிறார். அடிக்கடி வெண்பாவுக்கு குட்டி கதைகள் சொல்லி பக்குவப்படுத்துவது மற்ற மாணவிகளுக்கும் தேவையான ஒரு அம்சம் எனலாம்.
கிளைமாக்ஸ் நெருக்கத்தில் யூகிக்க முடியாத திருப்பங்கள் காட்சிகளை ரெக்கைகட்டி கட்டி பறக்க வைக்கிறது. ‘அந்த 20 நிமிடங்கள்’ என்று டைட்டில் வைக்கும் அளவுக்கு கடைசி 20 நிமிடங்களில் படத்துக்கு உயிராக இழையோடவிட்டிருக்கிறார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.
இளையராஜா மகள் ராஜா பவதாரணி இசை ராஜாங்கம் நடத்தியிருக்கி றார். மெலடிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுத்து அழுத்தமான இசையை தந்திருந்ததால் காட்சிகள் இன்னுமும் எடுபட்டிருக்கும். ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு தெளிவு.
‘மாயநதி’ காதல் கானல் நீர