மதுக் கடைகள் திறப்பு..
மு.க.ஸ்டாலின் போராட்டம்..
சென்னை, மே 7:
கொரோனா ஊரடங்கு வரும் 17ம் தேதிவரை அமலில் உள்ளது. இதற்கி டையில் 7ந்தேதி (இன்று) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. மற்ற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று காலத்தில் மது கடைகள் திறந்தால் கொரோனா வைரஸ் அதிகம் பரவும் என்று கூறி பல இடங்களில் மதுக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்
பொதுமக்கள் கருப்புபேட்ச் அணிய வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஐந்து பேருக்குமிகாமல் வீடுகளுக்கு வெளியே நின்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அதன்படி பல இடங்களில் வீடுகளுக்கு முன் நின்று போராட்டம் நடத்தினர்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியுடன் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது குடும்பத் தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#MK Stalin holds protest against TASMAC opening