போனில் பேசிய விண்ணைத் தாண்டி வருவாயா ஜோடி
திரிஷாவுக்கு டயல் செய்த சிம்பு..
‘கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்த படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.கார்த்திக், ஜெசி என்ற கதாபாத்திரத்தில் சிம்பு, திரிஷா நடித்திருந்தனர். சிம்புவின் மென்மையான நடிப்பும். திரிஷாவின் அழகான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்நிலையில் கவுதம்மேனன், திரிஷா இணைந்து கொரோனா ஊரடங்கில் ஒரு குறும்படம் உருவாக்கி யுள்ளனர் அதுவும் அவரவர் வீட்டிலிருந்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது
திரிஷா தனது வீட்டிலிருந்து கவுதமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறும்படம் பற்றி விவாதித்தார.கவுதம் மேனன் தனது வீட்டில் இருந்தபடியே திரிஷாவிடம் கேமரா கோணம் எப்படி வைப்பது, எப்படி நடிக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் தெரிவித்தார், அதன்படி திரிஷா தனது வீட்டில் கேமரா கோணத்தை அமைத்து நடித்தார்.
இந்த குறும்படத்திற்கு கார்த்திக் டயல் செய்த எண்’ என்று பெயரிடப் பட்டுள்ளது இந்த குறும்படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.
#thirsha short film ‘karthi dial seytha enn ‘
#simbu #சிம்பு #திரிஷா