1975 ஆம் வருடம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வா ராகங்கள்’ படத்தின் முலம் அறிமுகமா னார்.
இரும்பு கதவுகளை திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார். 1975 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வந்தது.
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் ரஜினிக்கு திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதையொட்டி ரசிகர்களும் பிரபலங்களும் அந்த நாளை பெரிய அளவில் கொண்டாடத் திட்டமிட் டுள்ளனர்.
அதற்கு தொடக்கமாக, பல பிரப லங்கள் இன்று ரஜினியின் பொதுவான டி.பியை வெளியிட்டுள்ளனர்.
ரஜினியின் திரை பயணத்தின் 45 ஆண்டுளை குறிக்கும் சிறப்பு ஹேஷ்டேக் #45YearsOfRajinismCDP உள்ளது. மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அட்லீ, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராகவா லாரன்ஸ், மோகன்லால், சுனில் ஷெட்டி மற்றும் பலர் இதனை வெளியிட்டுள் ளனர்
தனது 45ஆண்டு திரையுலக பயணத்தை ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினி காந்த் டிவிட்டர் மெசேஜ் வெளிட்டுள்ளார்.
அதில் அவர் கூறிருப்பதாவது:
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில் என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய இதயம்கனிந்த நன்றி. என தெரிவித்தி ருப்பதுடன் ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ் டேக்கும் வெளியிட்டிருக்கிறார்ரஜினி.
,