Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் வைரலாகி வருகிறது !

பெரும் காத்திருப்பிற்கு பின் ஆன்லைனில் வெளியான தோர்: லவ் அண்ட் தண்டர் டீசர் வெளியான சில மணிநேரங்களில் வைரலாக மாறியது! டீசரில் தோர் ஒரு சாதுவைப் போல மலையில் தியானம் செய்யும் காட்சியைப் பார்த்து, இந்திய ரசிகர்கள் சமூக ஊடகங் களில் படம் எவ்வாறு இந்தியாவுடன் உணர்வுப்பூர்வமாக இணைந்துள்ளது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்! .

மார்வல் ஸ்டுடியோஸ் திங்களன்று தோர்: லவ் அண்ட் தண்டர் படத்தின் முதல் டீசரை அறிமுகப்படுத்தியது, இது அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமின் நிகழ்வுக ளுக்குப் பிறகு, உள் அமைதியைக் கண்டறிவதற்கான தோரின் பயணத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சில தொடக்கக் காட்சிகளில், தோர் தனக்கு பிரியமான நட்சத்திர பெருவெளியில் தியானத்தில் இருப்பதைப் பார்க்கலாம், இதனை கண்ட இந்திய ரசிகர்கள் நமது சொந்த சிவபெருமானைப் போன்ற தோற்றத்துடனும் அதிர்வுகளுடனும், டீசர் இந்தியாவை எப்படி ஈர்க்கிறது என்று ரசிகர்கள் உற்சாகமாக பேசி வருகின்றனர்.

இணையத்தில் மலை உச்சியில் தியானம் செய்யும் காட்சியின் ஸ்கிரீன் ஷாட்க ளைப் பகிர்ந்துகொண்டு, “#ThorLoveAnd Thunder இல் தோர் ஒரு சாதுவைப் போல் தியானம் செய்வது போல் தெரிகிறது” என்பது போன்ற பல்வேறு ட்வீட்கள் வந்துள்ளன. மற்றொரு ரசிகர், “மோஹ் மாயாவிலிருந்து விலகி சாது வாழ்க்கை யின் பாதையில் செல்ல தோர் இமயமலைக்குச் சென்று தனது சூப்பர் ஹீரோ வாழ்க்கையை விட்டுவிட்டு சன்யாசியானார்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மூன்றாவது நபர், “டிரெய்லரில் காட்டப்பட்டுள்ள தோர் தியானம், போதிசத்வா ஞானம் பெற தியானம் செய்வதை சித்தரிக்கும் கலையை நினைவூட்டுகிறது…” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபலமான தோர்: ரக்னாரோக் படத்தி னை இயக்கி, லவ் அண்ட் தண்டர் படத்திற்காக மீண்டும் இயக்குனரின் நாற்காலிக்குத் திரும்பியிருக்கும் இயக்குநர் டைகா வெயிட்டிடியின் அசல் அம்சங்கள் ஆக்‌ஷன் பேக் செய்யப்பட்ட ஸ்டைலான மற்றும் வேடிக்கையான டிரெய்லரில் பிரதிபலிக்கின்றன. மார்வல் படங்களில் இந்தப் படம் இந்தியாவில் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

டிரெய்லர் லிங் :

மார்வெல் ஸ்டுடியோஸ் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’ ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது

தோர்: லவ் அண்ட் தண்டர் குறித்து

ஆஸ்கார் விருது பெற்ற டைகா வெயிட்டிடி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் இந்திய ரசிகர்களின் விருப்பமான அவெஞ்சர் தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நட்சத்திர குழும நடிகர்கள்: டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் ஆகியோருடன் நடிகர் கிறிஸ்டியன் பேல் மாரவல் திரையுலகிற்குள் அறிமுகமாகிறார்.

Related posts

பிரபாஸ் பான் இந்திய நடிகரானது எப்படி

Jai Chandran

ஆர்யா நடிக்கும் “தி வில்லேஜ்” வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Romantic Number called AlaiAlai For KoogleKuttapa.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend