Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீ இவன் படப்பிடிப்பிற்கு அனுமதி கோரி கலெக்டரிடம் இயக்குனர் மனு

3மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கி யவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெய முருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள் .
இதன் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்தது. இன்னும் 25 சதவீத படப் பிடிப்பை திருப்பூரில் நடத்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான டி. எம் ஜெயமுருகன் திருப்பூர் மாவட்டம் ஆட்சியரிடம் முறையாக அனுமதி கோரி அவரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற உள்ளது.
தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் பல படக்குழுவினர் முறையாக அனுமதி பெறாமலும், குறிப்பிட்ட வழிமுறைகளை
பின்பற்றாமலும் படப்பிடிப்பை நடத்துகின்றனர். அதை தவிர்க்க வேண்டும். நாங்கள் முறையாக அரசிடம் அனுமதி பெற்ற பிறகே படைபிடிப்பை பாதுகாப்பு முறைமைகள் அனைத்தையும் கடைபிடித்து நடத்த உள்ளோம் என்கிறார் இயக்குனர் டி.எம். ஜெயமுருகன்.

Related posts

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டி: கமல் அறிவிப்பு

Jai Chandran

75 வது ஆண்டு சுந்திர தின நினைவுத் தூண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறப்பு

Jai Chandran

Vikram Prabhu starrer Taanakkaaran releasing on Disney+ Hotstar..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend