தலைவர்களுடன் மோடி திடீர் ஆலோசனை..
கொரோனா தடுப்பு பற்றி முக்கிய பேச்சு..
புதுடெல்லி ஏப் :
சீனா நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 200 நாடுகளில் பரவியது. வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் எல்லா நாடுகளும் திணறி வருகின்றன.
இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. கடந்த மாதம் 24ம் தேதி பிறப்பித்த ஊரடங்கு ஏப் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா சமூக பரவலாகாமல் இருந் தாலும் தொற்று பரவுவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள்,எதிர்க்கட்சி தலைவர் களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, காங்கிரஸ் கட்சி இடைக் கால தலைவர் சோனியா காந்தி, மேற்கு முதல்வர் மம்தா பானர்ஜி,
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங் கானா முதல்வர் சந்திரசேகர ராவ்,
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மேலும் என்னென்ன விதமான நடவடிக்கை எடுப்பது, ஊரடங்கு நீடிப்பது போன்ற முக்கிய விஷயங்கள் குறித்துப் பிரதமர் அவர்களிடம் கலந்துரையாடியதாக தெரிகிறது.
#PM Modi Calls Ex-Presidents, Former PMs, Sonia, Mamata To Discuss Covid-19