தமிழகத்தில கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்வு..
தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று கூறியது :
சென்னை ஏப் :கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 739. இவர்கள் தவிர 230 பேர் அரசின் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
690 பேருக்கு ஏற்கெனவே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மேலும் 48 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உயிரிழந்தோர் 8, குணமடைந்தவர்கள் 21.
#48 more corona test positive in TN, tally rises to 738