தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு..
அரசுக்கு மருத்துவக்குழு பரிந்துரை..
சென்னை ஏப் :
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவுடன் இன்று காலை வீடியோ வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு டாக்டர் பிரதீபா நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப் பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பு குறித்தும் தமிழக அரசு அக்கறை காட்டி வருகிறது. அவர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, எனவே, மேலும் இரண்டு வாரங்க ளுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு பிரதிபா தெரிவித்தார்.
#Tamil Nadu COVID-19 expert panel recommends two-week lockdown extension
#மேலும் 2வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
#மருத்துவ குழு பரிந்துரை