படம் :ஜிப்ஸி
நடிப்பு: ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன்,லால்ஜோஸ், சுசீலா ராமன்
தயாரிப்பு: அம்பேத்குமார்
இசை:சந்தோஷ்நாராயணன், சுசீலா ராமன்
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே.
இயக்கம்: ராஜூமுருகன்
காஷ்மீரில் நடக்கும் தாக்குதலில் சிறுகுழந்தையிலேயே அனாதை யாகிறார் ஜீவா. அவரை நாடோடி யாக திரியும் குதிரைக்காரர் எடுத்து வளர்க்கிறார். ஜிப்ஸி என்று பெய ரும் வைக்கிறார். ஜீவாவும் வளர்ப்பு தந்தையைபோல் நாடோடியாக திரிகிறார். ஊர் ஊராக, மாநிலம் மாநிலமாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சீசஸனுக்கு ஏற்ப குதிரையுடன் சுற்றித்திரிந்து பாட்பாட்டி பிழைப்பு நடத்து கிறார். அவரை கண்டு மனம் பறிகொடுக் கிறார் நடாஷா சிங். முஸ்லிம்பெண் ணான அவரை குடும்பத்தினர் கண்டிப்புடன் வளர்க்கின்றனர். ஜீவாவுடன் அவர் நெருக்கம் காட்டு வதை அறிந்த தந்தை உடன டியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்கி றார். திருமண நாள் அன்று நடாஷா ஜீவாவுடன் வீட்டை விட்டு ஓடிவிடுகி றார். கால்போன போக்கில் வட நாட்டுக்கு சென்று பிழைக்கின் றனர். கர்ப்பிணியாக இருக்கும் நடாஷா வாடகை வீடு எடுத்து தங்க வேண்டும் என்று கேட்கிறார். அவரது ஆசைக்கு ஏற்ப வாடகை வீடு எடுத்து தங்குகிறார் ஜீவா. திடீரென்று அங்கு கலவரம் பரவு கிறது. கத்தி, உருட்டுக்கட்டை யுடன் ஒரு கூட்டம் தாக்குதல் நடத்துகிறது. கர்ப்பிணியான நடாஷாவும் கலவரத்தில் சிக்கிக் கொள்கிறார். அவரை வெட்டி சாய்க்க ஒருவன் அரிவாளுடன் கையை உயர்த்துகி றான். இதற்கிடை யில் அங்கு வரும் ஜீவா நடாஷாவை காப்பாற்றி ஒருஇடத்தில் நிற்க வைத்து விட்டு தான் வளர்க்கும் குதிரையை தேடிச் செல்கிறார். குதிரையையும் அந்த கூட்டம் பெட்ரோல் ஊற்றி எரிகி றது. இந்த கலவரத்தில் ஜீவா கைதாகிறார். நாடாஷா ஏதோ ஒரு வீட்டில் பிள்ளை பெறுகிறார். கலவரம் ஓய்ந்த ஒரு வருடத்துக்கு பிறகு சிறையிலிருந்து வெளியில் வரும் ஜீவா எங்கெங்கோ மனைவி யை தேடுகிறார். அவரை பெற் றோர் அழைத்துச் சென்றுவிட்டனர் என்பதை அறிந்த மீண்டும் அவரை அழைத்து வரச் செல்கிறார். அவரால் மனைவியை அழைத்து வர முடிந்ததா? என்பதற்கு உருக்க மாக விடை சொல்கிறது ஜிப்ஸி.
வெறுப்புணர்வு தூண்டும் பேச்சுக் கள் அதிகரித்து வரும் சூழலில் இப்படியொரு படம் தேவைதான் என்று கிளைமாக்ஸை பார்த்த வுடன் ரசிகர்களிடையே முணு முணுப்பாக எதிரொலிக்கிறது. எத்தனை ஹீரோக்கள் இந்த கதை யை புரிந்துகொண்டு ஒப்புக்கொள் வார்களோ தெரியாது ஆனால் ராமேஸ்வரம், கற்றது தமிழ் போன்ற கனமான கதையிலும் கதா பாத்திரத்திலும் நடித்த ஜீவா நிச்சயம் புரிந்துகொண்டுதான் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு வாழ்க்கையில் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக ஜிப்ஸி இருக்கும் என்பதில் சந்தேக மில்லை.
நாடோடியாக திரிந்து சந்தோஷ மாக வாழ்வை கழிக்கும் ஜீவா காதல் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டதும் அவரது பயணம் ஒரு கூட்டுக்குள் அடைபட்டு விட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனாலும் சுதந்திர பறவையாக மனைவியுடன் அவர் மீண்டும நாடோடி வாழ்க்கை மேற்கொள் ளும்போது வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாயாகிறார். வெளிநாட்டுக்கு வந்துவிடு பெரிய பாடகனாக்குகிறேன் என்று ஒருவர் அழைத்தபோதும் சுதந்திரமாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று சொல்லி தனது யதார்த் ததை உணர்த்தும்போது மனதை அள்ளுகிறார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதி யில் தனது மனைவி சிக்கியதை கண்டதும் உயிருக்கு துணிந்து போராடி அவரை மீட்பதும், கண் எதிரேலேயே குதிரை தீக்கரை யாகும்போது கலங்குவதுமாக நடிப்பில் ஜொலிக்கிறார். பின்னர் புரட்சிபாடகனாக மாறும் ஜீவா சிவப்பு சட்டைக்காரர்களுடன் கரம் கோர்த்து புரட்சியாளனாக நடமாடு கிறார். ஆனாலும் மனைவியுடன் வாழ வேண்டும் என்ற அவரது எண்ணம் இருமனதாக ஊசலாடு கிறது. மனைவிக்கு தலாக் சொல்லி பிரியமுயலும் நிலையில் கடைசி தலாக்கை சொல்வதற்கு முன் ஊரிலிருந்து புறப்பட்டு சென்று கலவரம் நடந்த பூமிக்கு செல்வதும். கலவரத்தில் ஈடுபட்ட வனை கண்டுபிடித்து அவனுக்கு முன்னாள் மனைவியை நிறுத்தி சமாதான முயற்சி மேற்கொள்ள வது என ஜீவா எடுக்கும் முயற்சி கள் நடைமுறைக்கு சாத்தியமில் லாத ஒன்று எண்ணும் நிலையில் அதை கச்சிதமாக மேடை அமைத்து நடத்தி காட்டும் இயக்குனர் ராஜூ முருகனை எவ்வளவு பாராட்டினா லும் தகும்.
பல்வேறு போராட்டங்கள் படத்தில் இடம்பெற்றதுபோல் இப்படம் வெளியாவதிலும் சென்சார் முதல் பல்வேறு போராட்டங்கள் சந்தித்து திரைக்கு வந்திருப்பது சாதனை யே.
ஜிப்ஸி-தேசிய ஒற்றுமை.