சினிமா போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளுக்கு அனுமதி
தமிழக அரசு உத்தரவு..
சென்னை, மே 8-
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. வரும் 17 ம் தேதிவரை ஊரடங்கு நீடிக்கி றது. தமிழகத்திலும்
ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா ஷூட்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின. இதன் காரணமாக படப்பிடிப்பும் நடக்க வில்லை,படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் வேலையில்லாமல் வருமானமின்றி சிரமத்துக்குள்ளா கினர்.
படப்பிடிப்பு தவிர்த்து போஸ்ட் புரொடக்ஷன் தொழில் நுட்ப பணி களை தொடங்கி கொள்ள அனுமதி தர வேண்டுமென்று தயாரிப்பாளர்கள், பெப்ஸி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார்கள். அதையேற்று வரும் 11ஆம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க அரசு அனுமதி அளித்திருக்கிறது
இதுபற்றி தமிழக அரசு இன்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக எந்த பணியும் நடக்காததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள தால் இத்தருணத்தில் தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
மேற்கண்ட தயாரிப்பாளர் களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் தயாரிப்புக்கு பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டும் 11.5 2020 முதல் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். 1. படத்தொகுப்பு (எடிடிங்) (அதிகபட்சம் 5 பேர்)
2 குரல் பதிவு (டப்பிங்) (அதிகபட்சம் 5பேர் )
3. கம்ப்யூட்டர் மற்றும் விஷூவல் கிராபிக்ஸ் (வி எஃப் எக்ஸ்/சி ஜி ஐ ) (10 முதல் 15 பேர்)
4. டி ஐ எனப்படும் நிற கிரேடிங் (அதிகபட்சம் 5 பேர்)
5. பின்னணி இசை (ரீரெக்கார்டிங்) (அதிகபட்சம் 5 பேர்)
6 ஒலிக்கலவை ( சவுண்ட் டிசைன் மிக்ஸிங்)
(அதிக பட்சம் 5பேர் )
எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு களைப் பெற்றுத் தந்து அவர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய -மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றியும் பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகி றார்கள்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
#cinema post production work starts from 11th may
#போஸ்ட் புரொடக்ஷன் பணி
#பெப்சி #தயாரிப்பாளர்கள்