படம்: க/பெ ரணசிங்கம்
நடிப்பு: விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேலராமமூர்த்தி அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, மனோஜ்குமார், நமோ நாராயணா, பவானி ஸ்ரீ.
தயாரிப்பு:கேஜே ஆர் ஸ்டுடியோஸ்
ஒளிப்பதிவு: ஏகாம்பரம்
இசை: ஜிப்ரான்
இயக்கம்: விருமாண்டி
ரிலீஸ்: ஜி பிளக்ஸ் ஒடிடி தளம்.
தமிழ் சினிமாவையே சில சக்திகள் மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் ஆலமரம் ஆயிர மாண்டு வேர்விட்டு ஆழ பதிந்திருப்பது போல் தமிழ் கலாச்சாரம் ரத்தத்திலேயே இங்கு எல்லோருக்கும் ஊறி இருக்கிறது. எல்லாமே டிஜிட்டல் தளத்துக்கு வந்து விட்டாலும் மண்ணின் மாண்பையும், ஒரு தமிழ்ப் பெண்ணின் போராட்ட குணத்தை யும் சொல்லும் உணர்வு ரீதியான படமாக வந்திருக்கிறது க/பெ ரணசிங்கம்.
சினிமா கதை என்றால் அதில் கமர்ஷியல் கலந்திருக்க வேண்டும் என்று பொதுவாக ஒரு விதி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் கதையும், உணர்வும், ரத்தத்தோடும் சதையோடும் ஊறிப்போன பாசத்தையும் சொல்ல வேண்டும் என்று ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே முன்வருகின்றனர். முதல் படமாக இருந் தாலும் அந்த துணிச்சலோடும் வந்திருக் கிறார் இயக்குனர் விருமாண்டி.
கதைக்கு முக்கியத்துவம் தருகிறேன் என்று சொல்லிக்கொண்டே கமர்ஷிய லுக்கு முக்கியத்துவம் தரும் சில ஹீரோ க்களுக்கு மத்தியில் நிஜமாகவே கதைக்கு முக்கியத்துவம் தந்து நடித்துக்கொண்டி ருக்கிறார் விஜய் சேதுபதி. இன்னொரு ஹீரோவிடம் இந்த கதையை சொல்லியி ருந்தால் காதுகொடுத்தாவது கேட்டிருப் பார்களா என்பது சந்தேகம்தான்.
ராமநாதபுரம் மாவட்டம் தண்ணீர் பிரச்னையில் தொடங்கும் புள்ளி துபாய் வரை நீள்கிறது. ஊரில் தண்ணீர் கிடைக் காததால் மக்களை திரட்டி போராடுகிறார் விஜய் சேதுபதி. ஊருக்காக பாடுபடும் விஜய் சேதுபதிக்கும் பக்கத்து ஊர் பெண் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் காதல் மலர் கிறது. இருமனம் இணைந்து திருமணம் செய்கின்றனர். திருமணத்துக்கு பிறகும் ஊர் பிரச்னையை பார்த்துக் கொண்டிருக் கிறார் விஜய்சேதுபதி அவரை வேலைக்கு போய் சம்பாத்திக்கச் சொல்ல ஒருவழி யாக துபாய்க்கு வேலைக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. இனிமேல் கதை இப்படித் தான் நகர்ப்போகிறது என்று யூகிக்கும் நிலையில் அதற்கு நேர்மாறாக போகிறது போக்கு. துபாய் வேலைக்கு சென்ற விஜய் சேதுபதி இறந்துவிடுகிறார். ஒரு நிமிடம் அடுத்து கதை எப்படி நகரப் போகிறது என்று பார்த்தால் அது இன்னும் ஆழமாக நகரத் தொடங்குகிறது. துபாயில் இறந்த கனவரின் உடலை கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் முயல அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. அதில் உள்ள சட்டச் சிக்கல். அரசியல் என பல சிக்கல் கள். தடங்கல். சட்ட சிக்கல்கள் போன்ற வற்றையெல்லாம் கடந்து ஐஸ்வர்யாவின் போராட்டம் வெற்றி பெறுகிறதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் செல்கி றது.
சிலருக்கு இந்த கதைதான் செட்டாகும் என்ற எண்ணமிருக்கும் விஜய் சேது பதிக்கு எந்த கதையும் செட்டாகும் என்று சொல்லும் அளவுக்கு தந்து பாணியை வித்தியாசமாக வளர்த்துக்கொண்டிருக்கி றார். ஹீரோ என்றாலும் ஒகே, வில்லன் என்றாலும் ஒகே, இப்போது ராங் சென்டிமென்ட்டுக்கும் ஒகே என்று இந்த படம்மூலம் நிரூபித்திருக்கிறார்.
இப்படத்தில் இன்னொரு பெண் விஜய் சேதுபதி இருக்கிறார் அவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். அரியநாச்சி என்ற கதாபாத்திரம் இவருக்காகவே வடிக்கப் பட்டதா அல்லது அந்த பாத்திரத்துக்குள் இவர் புகுந்து கொண்டாரா என்று வித்தியாசப்படுத்தி பார்க்க முடியாமல் ஒன்றிப்போய் இருக்கிறார். சொன்னால் புரியாது படத்தை பார்த்தால்தான் ஐஸ்வர்யாவின் நடிப்பும் எப்படி என்பதை அனுபவிக்க முடியும்.
ஒரு பாத்திரம் இரண்டு பாத்திரம் மட்டு மல்ல எல்லா பாத்திரமும் கூட்டணி சேர்ந்துக்கொண்டு படத்தை படமாக இல்லாமல் நிஜத்துக்கு மாற்றி இருக்கிறது. மண்ணின் மணம் மாறாமல் கேமாரவை சுழற்றி உள்ளார் ஏகாம்பரம். இது ஒடிடி தளத்தில் பார்க்க வேண்டியா படம் என்பதால் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். வாகை சூட வா படத்துக்கு பிறகு முத்திரை பதித்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஜிப்ரான்.
ஏற்கனவே சொன்னபடி உலகம் டிஜிட்ட லுக்கு மாறலாம் ஆனால் மனதுக்குள் எழும் உணர்வுகளை டிஜிட்டல் மாற்றி விடாது.
க/பெ ரணசிங்கம் உணர்வை பேசி இருக்கிறது.