ஊரடங்கை கடுமையாக்க
உத்தரவு
புதுடெல்லி, மார்ச்:
சர்வதேச அளவில் மிரட்டலை ஏற்படுத்தி உயிர்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்து வதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்தியஅரசு. பிரதமர் மோடி 21 நட்கள் ஊரடங்கை அறிவித்தார்.
தமிழகத்திலும் கொரோனா தொற்று பரவியிருப்பதை யடுத்து அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தி ருக்கும் விதம், மக்களிடம் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வு என்பது பற்றி கேட்டறிந்தார். மேலும் தமிழகத்தில் ஊரடங்க அமல்படுத்திருக்கும் நிலவரங் கள் குறித்து கேட்டறிந்ததுடன் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.
#Enforce coronavirus lockdown strictly in Tamil Nadu, PM Modi tells CM Palaniswami