கையில் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை..
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் கையில் முத்திரை குத்திக் கொண்ட படத்துடன் ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க பல்வேறு வழிமுறைகளை டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் தனிமையாக இருப்பதும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதை ஏற்று தனக்கு கொரோனா அறிகுறி இல்லாத நிலையிலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தனது வீட்டில் தன்னை தனிமைபடுத்திக்கொண்டிருக்கிறார். அந்த விவரத்தை குறிக்கும் விதமாக, ‘நான் தனிமையில் இருக்கிறேன்’என்று பதிவிட்டி ருக்கிறார்.
மேலும் வரும் 30ம் தேதி வரை தனிமை பாதுகாப்பு முறையை கடைபிடிக்கவுள்ளதை உணர்த்தும் வகையில் தனது முழங்கையில் ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை குத்திக்கொ ண்டிருக்கிறார் அமிதாப்.