கொரோனாவில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ 1கோடி:
மு.க.ஸ்டாலின் அறிக்கை :
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி தலைவர்களுடன் வீடியோ மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை :
கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக் கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்.
ஊரடங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கு வதை அரசியல் நோக்கத்துடன் அரசு தடுக்க முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனை பின்பற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும். உதவும் கரங்களுக்கு வலு சேர்த்த உயர்நீதி மன்றத்தின் உத்தரவை அரசு செயல் படுத்த வேண்டும்.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#All Party Meeting: Mk.Stalin Statement
#முகஸ்டாலின்