கொரோனவை தடுக்க ஊரடங்கு மட்டும் தீர்வில்லை
ராகுல் காந்தி பேட்டி..
புதுடெல்லி ஏப் :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வீடியோ மூலமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :
கொரோனா தொற்று நாடுமுழுவதும் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதை எதிர்த்துப் போராட எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.
கொரோனா பரவலை தடுக்க முதல் ஆயுதம் அதற்கான பரிசோதனைதான். ஆனால் சென்ற 72 நாட்களில் ஒரு மாவட்டத்திற்கு 350 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. பரிசோதனை மையங்கள் மற்றும் கருவிகளை வழங்கவேண்டும்.
ஊரடங்கு மட்டுமே கொரோனவை தடுக்க தீர்வு கிடையாது. கொரோனா பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால்தான் தடுக்க முடியும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
#Lockdown not a solution:Ragul Gandhi
#ராகுல் காந்தி