கார் விபத்தில் சிக்கிய மிரட்டல் பட ஹீரோயின்..
கொரோனா தடையில் சுற்றியதில் சோகம்..
வினய், சந்தானம், பிரபு நடித்த படம் மிரட்டல். இதில் ஹீரோயினாக நடித்தவர் ஷர்மிளா மன்றே. இவர் சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் பெங்களூரில் உள்ள வீட்டில் வசிக்கும் இவர் இன்று அதிகாலை தனது பாய்பிரண்டை சொகுசு காரில் அழைத்துக்கொண்டு வேகமாக பறந்தார்.
ரெயில்வே கிராசிங் அருகே கார் சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த இரும்பு தூணில் மோதி கார் கவிழ்ந்தது இருவருக்கும் லேசான ரத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்றவார்கள் பின்னர் தங்கள் குடும்ப டாக்டரிடம் சந்தித்து சிகிச்சை பெற புறப்பட்டு சென்றனர்.
#Tamil Actress shrmila injured in Car Accident
#Mirattal Movie Actress Sharmila Mandre