ஒ டி டி தள ரிலீஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!
கொரோனாவால் அமெரிக்காவில் மாறிய விதி..
நியூயார்க், மே. 3-
சமீபகாலமாக கோலிவுட்டில் ஒ டி டி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஒ டி டி தளத்தில் ரிலீஸ் ஆகும் படத்துக்கு ஆஸ்கர் விருதுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கேற்ப விதி மாற்றம் செய்திருக் கிறது ஆஸ்கர் விருது கமிட்டி.
2020ம் ஆண்டு படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடக்கிறது. உலகமெங்கும் கொரோனா தொற்றால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டி ருக்கிறது. அமெரிக்கா விலும் கொரோனா தொற் றால் ஊரடங்கு உள்ளது. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டு படங்கள் வெளியிட முடியவில்லை. நேரடியாக ஒ டி டி தளத்தில் புதிய படங்கள் வெளியாகி உள்ளதன. இதனால் அப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் விதிகள்படி பங்கேற்கமுடியாத நிலை உருவானததால் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்பையடுத்து தியேட்டரில் வெளியாகாமல் ஒ டி டி தளத்தில் வெளியான படங்கள் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என தற்காலிகமாக விதிமுறையை மாற்றம் செய்துள்ளனர். அதேசமயம் ஒ டி டி யில் வெளியான படங்கள் தியேட்டரில் வெளியிடுவதற்கு தயாரிக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் எனவும் புதிய விதியில் குறிப்பட்டுள்ளது.
#Oscars change streaming rule