ஒ டி டியில் படங்கள் : 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை..
ஒ டி டி (ஓவர் தி டாப் ) எனப்படும் இணைய தளம் வழியாக புதிய படங்கள் ரிலீஸ் செய்வது குறித்து பாரதிராஜா, டி.சிவா உள்ளிட்ட 30 தயாரிப்பாளர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார். அது வருமாறு :
திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதியபடங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை நல்ல தொகை கொடுத்து வாங்கி, நேரடி யாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர் களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடி யாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக் கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறை யில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை நாம் அனைவரும் வரவேற்று மேலும் பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கு வாங்க வேண்டும் என்று கோர வேண்டும்.
மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும், சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்து வரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரி வித்து கொள்கிறோம்.
திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர் கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவு களை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கி றோம்.
இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT ப்ரீமியர் படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கி றோம்.
ஒற்றுமையை எதிர்நோக்கி,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இயக்குனர் பாரதி ராஜா,nகே. முரளிதரன், டி சிவா, கே.எஸ். ஸ்ரீனிவாசன், கே ராஜன், கே. ஈ.ஞானவேல்ராஜா, எச்.முரளி, கே. விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், எஸ். எஸ். துரைராஜ், பெப்சி சிவா, ஓயநாட் எஸ் சஷிகாந்த், ஜி தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், ஜே எஸ் கே சதீஷ்குமார், சி.வி.குமார், சுதன் சுந்தரம் (பேஷன் ஸ்டுடியோஸ்), சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா, எஸ்.நந்தகோபால், ஆரா சினிமாஸ் மகேஷ், ஆர்.கே. சுரேஷ், வினோத் குமார், பி எஸ்.ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம் எஸ் முருகராஜ், டாக்டர் . பிரபுதிலக், ‘கின்னஸ்’ பாபுகணேஷ் மேலும் பல தயாரிப்பாளர்கள்.
இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக் கப்பட்டிருக்கிறது.
#30producers combained statement about OTT platform business
#பாரதிராஜா