படம் : அடவி
நடிப்பு :வினோத்கிஷன் அம்மு அபிராமி, ராஜபாண்டியன், ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், கே.சாம்பசிவம்
இசை :சரத் ஜடா
ஒளிப்பதிவு :ரமேஷ். ஜி
இயக்குனர்ரமேஷ் ஜி
ஏலகிரி கோவனம்பதி பகுதி காடுகள் அடர்ந்த பகுதி. அங்கு பழங்குடிமக்கள் பரம்பரை பரம்பரையாக வசிக்கின்றனர். அந்த பகுதியில் பெரிய ஓட்டல் கட்ட பெரும்புள்ளி ஆர். என். ஆர். மனோகர் திட்டமிடுகிறார். அதற்கு இடையூறாக கோவனம்பதி கிராமம் இருக்கிறது. அந்த மக்களை வெளியேற்றி இடத்தை ஆக்கிரமிக்க முயல்கின்றனர்
அதற்கு ஊர் இளைஞர்களும் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின் றனர். ஆனால் போலீஸ் உதவியுடன் அடாவடியாக ஆக்ரமிப்பு நடக்கிறது. எவ்வளவோ எதிர்த்தும் பயனில் லை கிராமத்தையே அழித்து கார்ப்பரேட் கைக்கு கிராமம் செல்கிறது. மக்கள் விலங்கைவிட கேவலமாக சாகடிக்கப்படுகின்றனர் என்ற உண்மையை துணிச்சலாக போட்டு உடைத்திருக்கிறார் இயக்குனர்.
படம் தொடங்கிய சிறிது
நேரத்திலேயே அனைவரையும் காட்டு பகுதிக்குள் அழைத்து சென்று விடுகிறார் இயக்குனர்.
அதன் பிறகு அந்த மக்களோடு ரசிகர்களும் அவர்களது வாழ்க்கையோடு கலந்துவிடுகிறார்கள். திடீரென்று போலீசாரை காவல் தெய்வம் சாகடிக்கிறது என்று சொல்லும்போது ஏதோ மர்மம் இருக்கிறது என்ற சஸ்பென்ஸ் ஆவலைத்தூண்டுகிறது.
ஹீரோ வினோத்கிஷன், ஹீரோயின் அம்மு அபிராமியின் காதல் விளையாட்டு மனதுக்கு தாலாட்டு.
போலீஸ் அராஜகம் அதிகரிக்கும்போது வினோத் பொங்கி எழுவதில் நியாயம் இருக்கிறது.
குறிப்பாக அம்மு அபிராமி நடிப்பில் ரொம்பவே ஸ்கோர் செய்கிறார். காதல் பார்வையில் தென்றலை வீசும் அம்மு கோபத்தில் அனல் கக்குகிறார்.
ராஜபாண்டியன், ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், கே.சாம்பசிவம் ஆகியோரின் நடிப்பு காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்கிறது
சினிமாவுக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் உள்ளதை உள்ளபடி காட்டியிருப்பதுதான் படத்துக்கு கிடைக்கும் வெற்றி
தேன்மொழி தாஸின் வசனம் யதார்த்தத்தை பேசுகிறது ரிபீட் வசனங்களை தவிர்த்திருக்க லாம். இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் கதைக்கும் காட்சிக்கும் ஏக பொருத்தம். சரத் ஜடா இசையும் கதையை ஓவர் டேக் செய்யாமல் ஒத்துழைத்திருக்கிறது.
அடவி -நிஜம் பேசுகிறது.