Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பில் கட்டாததால் எஸ்பிபி உடலை தர மறுத்த மருத்துவனை மீது துணை ஜனாதிபதி நடவடிக்கை? எஸ்.பி,சரண் பரபரப்பு விளக்கம்..

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிதது செனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார் அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது அதில் சற்று உடல்நிலை தேறியது. விரைல் குணம் அடைவார் என்று எதிர்பார்த்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் கடந்த வெள்ளிகிழமை மரணம் அடைந்தார்.
மூத்த பாடகருக்கு ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர் மற்றும் திரையுல கினர், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். செங்குன்றம் தாமரை பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் அரசு மரியாதைகளுடன் எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப் பட்டது.
இந்நிலையில் யூடியூபில் எஸ்பிபி ரசிகர்கள் என்ற பெயரில் வீடியோக்கள் ,வெளியிடப்படுகிறது. அதில் எஸ்பிபிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை பில் தொகையை கட்டாமல் உடலை தரமுடியாது என்று கூறியதாகவும் இதுகுறித்து குடும்பத்தினர் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிடம் கூறியதாகவும் அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த துணை ஜனாதிபதி மருத்துவனக்கு தொடர்பு கொண்டு உடலை கொடுக்க சொன்ன தாகவும் அந்த வீடியோவில் பல அதிர்ச்சியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து எஸ்பி சரண் மகன் எஸ்பிபி சரண் ஒரு விளக்கத்தை வீடியோவில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதவது:
அப்பாவின் மருத்துவ சிகிச்சை பற்றி வதந்தி பரவுவது துரதிர்ஷ்டவசமானது, அதற்காக நாங்கள் அனைவரும் வருத் தப்படுகிறோம். ஒரு குடும்பமாக நாங்கள் துக்கப்படுகிறோம். எம்.ஜி.எம் மருத்துவமனை மற்றும் அப்பாவின் சிகிச்சை மற்றும் பில் கட்டணம் குறித்து வதந்திகள் பரவுவது துரதிர்ஷ்ட வசமானது.
ஆகஸ்ட் 5 முதல் நாங்கள் மருத்துவ மனையில் இருந்தோம். கடந்த வெள்ளிக்கிழமை செப்டம்பர் 25 ஆம் தேதி அப்பா காலமானார். மருத்துவ மனையில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் நாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பற்றிய வதந்திகள் உள்ளன, எனக்கு உதவுமாறு நான் மாநில அரசிடமும், பின்னர் துணை ஜனாதிபதியையும் கேட்டுக் கொண்ட தாக அந்த வதந்தியில் கூறப்படுகிறது. இது எல்லாம் உண்மை கிடையாது. எங்களிடமோ, சம்பந்தப்பட்ட வேறு யாருடனுமோ கலந்தாலோசிக்காமல் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, இந்த பிரச்சி னையுடன் தொடர்புடையவர்களுக்கு இது எவ்வளவு ஆபத்தானது மற்றும் புண்படுத்தும் என்பதை வதந்தி பரப்பு வர்கள் உணரவில்லை. இதுபோன்றவர்கள் ச ரசிகர்களாக இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இவர்கள் எஸ்பிபியின் ரசிகர்களாக இருக்க முடியாது, ஏனெனில் எஸ்பிபி ரசிகர் இதுபோன்ற ஒன்றை செய்ய மாட் டார். எஸ்பிபி எப்போதும் மக்களை காயப்படுத்துபவர் அல்ல. அவர் இருந் திருந்தால் வதந்திகளை பரப்பிய நபரை மன்னிப்பார். அவரைப் போல் நான் வதந்தி பரப்பியவரை மன்னிக்கிறேன்.
எஸ்பிபிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது பற்றி வதந்தி பரப்பிய சம்பந்தப்பட்ட நபருக்கு எதுவும் தெரியாது. யார் எவ்வளவு பணம் செலுத்தினார்கள் என்பதுபற்றி இப்போது எந்த விவரங்கள் நான் கொடுக்கப்போவதில்லை, ஏனென்றால் நானும் மருத்துவமனையும் சேர்ந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைச் செய்யப் போகிறோம். இதை நாம் செய்ய வேண்டியது வருத்தமளிக்கிறது.


ஒரு நபரின் செயல் பலருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது வருத்தமளிக் கிறது. இந்த வதந்திகள் அனைத்தையும் பரப்பும் நபர் அல்லது நபர்களுக்கு சொல்கிறேன், கடவுள் உங்கள் அனைவ ரையும் ஆசீர்வதிப்பார், அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். எம்.ஜி.எம் ஹெல்த் கேர் சென்னை எங்களுக்காக வும், என் தந்தைக்காக ஒரு குடும்ப மாகவும் செய்த சிகிச்சை மற்றும் பணிகளுக்காகவும் ஒரு குடும்பமாக நாங்கள் முற்றிலும் நன்றியுள்ளவர் களாக இருக்கிறோம். மருத்துவமனைக்குச் செல்வதை நான் மிஸ் செய்கிறேன், என் தந்தையை கவனித்து வரும் அனைத்து மருத்துவர்க ளையும் சந்திப்பதையும் சிகிச்சை அளித்த நர்ஸையும் நான் மிஸ் செய்கி றேன், எம்.டி. டாக்டர் பிரசாந்த், தலைவர் ராஜகோபாலன், தவறாமல் தினமும் காலையில் இடைவிடாமல் எனக்கு பிரார்த்தனைகளை அனுப்பி வருகிறார். பில்கள் பற்றிய விவரங்கள், அவை பின்னர் வெளிவரும், அதுவரை தயவுசெய்து இந்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நீங்கள் எந்த நபர்களை காயப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், கடவுள் உங்கள் அனை வரையும் ஆசீர்வதிப்பார்.
எம்ஜிஎம் சுகாதாரத்துறைக்கு ஒரு குடும்பமாக நாங்கள் கடன்பட்டிருக் கிறோம். ஒரு கருவி உதவிக்காக எம்.ஜி.எம் மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனையிடம் கேட்டபோது ​​அப்பல்லோ மருத்துவமனை எனது தந்தையின் சிகிச்சைக்காக உடனடியாக உபகரணங்களை அனுப்பினர்.
இவ்வாறு எஸ்பி.சரண் கூறினார்.

,

Related posts

டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

CCCinema

மத்திய பிரதேசத்தில் காங் ஆட்சி கவிழ்கிறது?

CCCinema

ஏப்ரல் 7ம் தேதி வீடு தேடி ஆயிரம் ரூபாய் வரும்..

Jai Chandran

Leave a Comment