Trending Cinemas Now
விமர்சனம்

பெண்குயின் (பட விமர்சனம்

பெண்குயின் (பட விமர்சனம் )

துணிச்சல்காரியின் சாகசம்

படம் : பெண்குயின்
நடிப்பு :கீர்த்தி சுரேஷ் லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், மாஸ்டர் அத்வித், மதி மற்றும் பலர்
இசை :சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு :ஸ்டோன் பெஞ்ச் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ்
ஒளிப்பதிவு கார்த்திக் பழனி
இயக்கம் :
ஈஸ்வர் கார்த்திக்
ரிலீஸ் :அமேசான் பிரைம் வீடியோ (ஓ டி டி, தளம் )

கர்ப்பிணியாக இருக்கும் ரிதம் (கீர்த்தி ) தனது குழந்தையை அவ்வப்போது தவற விடுகிறார். ஒரு கட்டத்தில் குழந்தை காணாமல்போகிறது. குழந்தையை யாரோ கடத்தியதாக போலீசில் புகார் தருவதுடன் அவரே தேடுதல் வேட்டையில் இறங்கு கிறார். சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த உருவம் பற்றி அறிகிறார் கீர்த்தி மலைப்பாதையில் வேகமாக காரை ஓட்டிச் செல்லும்போது திடீரென்று ஒரு சிறுவன் குறுக்கிடுகி றான் அவன் மீது மோதாமல் தவிர்க்கிறார். காரில் அடிபடாமல் தப்பிய சிறுவனை நெருங்கிப்பார்க் கிறார் கீர்த்தி. சில வருடத்துக்கு முன் காணாமல் போன தனது மகன் என்பதை அறிந்து மகிழ்கிறார். உடம்பெல்லாம் காயம் அடைந்திருக்கும் அவனை டாக்டரிடம் அழைத்து சென்று சிகிக்சை அளிக்கிறார். அவனுக்கு பேச்சு வரவில்லை. வீட்டுக்கு அழைத்து செல்கி றார். வீட்டில் சார்லி சாப்ளின் உருவம் பின்தொடர் கிறது. மீண்டும் குழந்தை கடத்தப் படுகிறான். கடத்தப்பட்ட குழந்தை கிடைத்ததா? கடத்தியது யார்? விடை கிளைமாக்சில்.
இதுவரை பார்த்த கீர்த்திக் கும் இப்படத்தில் பார்க்கும் கீர்த்திக்கும் அவ்வளவு வித்தியாசம்.. நடிப்பிலும், உருவத்திலும். தொடக்க காட்சிகளில் இவர் கீர்த்தி தான் என்று நம்புவதற்கு நீண்ட நேரம் பிடிக்கிறது. கொழுக் கென்று இருந்தவர் இப்படி ஒல்லி பிச்சனாகி விட்டாரே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு எழும். என்ன செய்வது மீண்டும் பழைய கீர்த்தியை பார்க்க முடியாது.

படத்தில் கீர்த்திக்கு 2வது கல்யாணம் ஆகிவிட்டது என்ற விவரம் தெரிவதற்கே நீண்ட நேரம் ஆகிறது. குடும்ப விஷயங்களில் ஒரு குழப்பம் இருந்தாலும் பயமுறுத்தும் விஷயத்தில் நன்றாகவே திகிலூட்டு கிறார் இயக்குனர்.
வயிற்றில் பிள்ளையை வைத்துக் கொண்டு எதுவெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் செய்து துணிச்சலான கீர்த்தி கண்ணுக்குள் பதிகிறார்.

காரை எடுத்துக்கொண்டு இரவில் ஏரிக்கரைக்கு தனியாக செல்வதுடன் அங்கு மர்ம உருவத்துடன் மல்லு கட்டுகிறார். அந்த உருவம் துரத்தி வர கீர்த்தி கார் சாவியை கீழே போடடுவிட்டு எடுக்க முடியாமல் தவிப்பது அச்சச்சோ நிமிடங்கள்.
கீர்த்திக்கு கணவராக வருபவர்கள் டைரக்டர் சொன்னதை செய்துவிட்டு செல்கிறார்கள். சீனுக்கு சீன் கீர்த்தி ஆக்ரமிக்கிறார்.

தனிக்காட்டிலிருக்கும் டாக்டர் வீட்டுக்கு சென்று அங்கு அவர் செய்யும் ரத்த களரி காட்சிகளில் கீர்த்தி நடத்தும் துப்பறியும் வேலை திகில் நிமிடங்கள்.
கிளைமாக்சில் வைததிருக்கும் திருப்பம் நம்ப முடிய வில்லை என்றாலும் எதிர்ப்பாராத ஷாக்தான். தணிக் கைக்கு செல்லவேண்டிய தில்லை என்பதால் ஒரு சில காட்சிகள் கத்தரிக்கு சிக்காமல் வந்திருக்கிறது. பெரிய திரையில் இக்காட்சிகள் உலுக்கி எடுத்துவிடும்

சந்தோஷ் நாராயணன் இசை காட்சிகளை ஓவர்டேக் செய்யாமல் வழிவிட்டிருக்கிறது.
கார்த்தி பழனி ஒளிப்பதிவு ஒருவித நீள நிற டோனில் கிரேடிங் செய்து திகில் மூடை மாறாமல் வைத்திருக். கிறது.
ஈஸ்வர் கார்த்திக் என்ன நினைத்தாரோ அதை திரையில் கொண்டு வந்திருக்கிறார். கீர்த்திக்கு இன்னொரு கணவர் கான்செப்ட் தேவை இல்லாதது. அதனால் கதைக்குள் எந்த மாற்றமும் இல்லை.

பெண்குயின் – நெருப்பு கோழி.

Related posts

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

CCCinema

உற்றான் (பட விமர்சனம்

CCCinema

அடுத்த சாட்டை விமர்சனம்

CCCinema

Leave a Comment