விமர்சனம்

ஐரா (விமர்சனம்)

படம்: ஐரா
நடிப்பு:நயன்தாரா (இரட்டை வேடம்). கலையரசன், யோகிபாபு, ெஜயபிரகாஷ், நிஷாந்த், மீரா கிருஷ்ணா, குலப்புள்ளி லீலா, மாதீவன், பேரெல்லா செல்லஸ், அஷ்வத்
தயாரிப்பு: கோட்டப்படி ஜே.ராஜேஷ்
இசை: சுந்தரமூர்த்தி கே.எஸ்.
ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன்
இயக்கம்: சர்ஜுன் கேஎம்.

மீடியாவில் வேலைசெய்யும் யமுனாவுக்கு (நயன்தாரா) வீட்டில் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அதுபிடிக்காமல் வீட்டில் சொல்லாமல் தனது பூர்வீக வீட்டுக்கு செல்கிறார். அங்கு அமானுஷ்யா நிகழ்வுகள் நடக்கிறது. அதையே பயன்படுத்தி யூ டியூப் சேனல் தொடங்கி பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற திகில் வீடியோக்கள் வெளியிடுகிறார். ஒரு கட்டத்தில அந்த வீட்டில் நிஜத்திலேயே பேய் இருப்பது தெரிகிறது. மர்மமான முறையில் மாடியிலிருந்து சிலர் தள்ளி கொலை செய்யப்படுகின்றனர். அந்த கொலைபட்டியலில் யமுனாவும் இருக்கிறார். இந்த உண்மை யமுனாவுக்கு தெரியவர மந்திரவாதியை நாடி உண்மையை கண்டறிகிறார். தன்னை அழிக்க நினைக்கும் பேய் நடத்தும் அடாவடிக்கு யமுனா பலியாகிறாரா? அல்லது தப்பிக்கிறாரா என்பதற்கு திகிலுடன் பதில் அளிக்கிறது ஐரா.

படத்தின் தொடக்கதே திகிலாக தொடங்கி ஆடியன்ஸை திகிலில் மூழ்கடித்து விடுகிறார் இயக்குனர். இரவுவேளையில் கொட்டும் மழையில் காட்டுபகுதி பங்களாவுக்குள் செல்லும் 2 போலீசாரை பேய் விரட்டியடித்ததும் காட்சிகள் ரெக்கை கட்டிக்கொள்கிறது. யமுனா, பவானி என முற்றிலும் இருமாறுபட்ட வேடங்களில் நடிப்பை கொட்டி தீர்த்திருக்கிறார் நயன்தாரா. 
இரவில் யாரும் தனியாக இருந்தால் நிச்சயம் பயப்படுவார்கள் என்ற அச்சத்தை படரவிடும் அளவுக்கு பரந்துவிரிந்திருக்கும் அந்த பாரம்பரிய வீட்டுக்குள் அமானுஷ்யங்கள் நடக்கும்போது கொஞ்சம் நடுங்கினாலும் அதற்கு பயந்து ஓடாமல் தனி ஆளாக வீட்டை சுற்றி நோட்டமிடும் நயன்தாரா திக் திக் படரவிடுகிறார். 
தனது பாட்டி அருகில் அமர்ந்திருக்கும் நயன்தாரா தூரத்தில் கறுப்பு உருவம் தெரிவதை கண்டு நடுங்கியதும் மற்றொரு அதிர்ச்சி தருகிறார். திகிலாக சென்றுக்கொண்டிருக்கும் காட்சிகளில ரிலாக்ஸ் தரும் வகையில் யூ டியூப் சேனலில் பேய் புருடா விடுவதற்காக யோகிபாபுவை வைத்து நயன்தாரா படமாக்கி போடும் வீடியோக்கள் காட்சிகளை இலகுவாக்குகிறது. பயமுறுத்தும் காட்சியெல்லாம் முடிஞ்சிபோச்சு என்று எண்ணும் நேரத்தில் மீண்டும் கறுப்பு நயன்தாரா (பவானி கதாபாத்திரம்)போடும் பேய் ஆட்டம் அரங்கை அமைதிக்குள்ளாக்குகிறது. 
கறுப்பு நயன்தாராவை எப்போது காட்டப்போகிறார் இயக்குனர் என்று எதிர்பார்க்கும் சமயம் முதல்பாதிவரை வண்ணப்படமாக ஓடிய காட்சிகள் பின்னர் பிளாக் அண்ட் ஒயிட் காட்சிக்கு மாறியதும் புதிய சூழலுக்கு ரசிகர்கள் உட்படுகின்றனர். ராசி இல்லாத பெண் என்று குடும்பத்தினரும், ஊர்க்காரர் களும் திட்டுவதை எண்ணி கலங்கும் நயன்தாரா தனக்கு தானே கண்ணாடியில் பார்த்து இதெல்லாம் ஒரு மூஞ்சி என்று திட்டிச் செல்வது யதார்த்தம். கறுப்பு நயன்தாரா எப்படி பேய் ஆக மாறுகிறார் என்ற சஸ்பென்ஸை விமர்சனத்திலும் சஸ்பென்ஸாக வைத்தால் படம் பார்க்கும்போது ஷாக் கிடைக்கும். 
நயன்தாரா அழுதுபார்க்காதவர்கள் இதில் மனம்விட்டு அழுது நடிக்கும் காட்சிகளை பார்க்கும்போது கண்ணீரில் கரைந்துபோவர்கள்
மாடியிலிருந்து விழுந்து இறப்பவர்களை கலையரசன் கொன்றிருப்பாரோ என்று போலீஸ் எழுப்பும் சந்தேகம் காட்சியை வேகப்படுத்துகிறது. யோகிபாபு சில சேட்டைகள் செய்து சிரிக்க வைக்கிறார். 
இயக்குனர் சர்ஜுன் கேஎம் ஹாலிவுட் பாணியில் காட்சிகளை வடிவமைத்திருப் பது பிளஸ். இருளிலும் காட்சிகள் கண்ணில் தென்படும்படி ஒளிப்பதிவு செய்திருக்கும் கேமராமேன் சுதர்சன் ஸ்ரீனிவாசனின் கைவண்ணம் மெச்சத் தக்கது. முதல்பாதிவரை எங்கெங்கோ சுற்றித்திரியும் திரைக்கதை 2ம் பாதிக்கு பிறகுதான் ஒரு நிலையான இடத்துக்கு வருகிறது.
ஐரா- பேய் துரத்தல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close