Trending Cinemas Now
சினிமா செய்திகள் திரை பிறமொழி பொது செய்திகள் விமர்சனம்

2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்..

சென்ற 2019-ம் ஆண்டு தமிழ் திரையுலகம் பல்வேறு வெற்றி தோல்வி. மகிழ்ச்சி. துக்கம் போன்ற சம்பவங்களை எதிர்கொண்டது. முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வெளியாகின. மொத்தமாக 209 படங்கள் வெளியானலும் அதில் வெற்றி படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருந்தது. வெறும் 10 படங்கள் லாபம் த்நத படங்கள் படங்கள் என்றால் கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட விஜய் நடித்த பிகில் , அஜீத்குமார் நடித்த விஸ்வாசம். நேர்கொண்ட பார்வை. , விக்ரம் நடித்த கடாரம் கொண்டான். , சூர்யா நடித்த காப்பான், கார்த்தி நடித்த கைதி விஷால் நடித்த ஆக்‌ஷன், விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன், தனுஷ் நடித்த அசுரன் போற் படங்கள் குறிப்பிடத்தக்கது.
209 படங்கள் படியல் இதோ:
களவு, சிகை. இக்லோ. தேவக்கோட்டை காதல், மாணிக், பேட்ட, விஸ்வாசம். சார்லி சாப்ளின் 2, குத்தூசி,
சிம்பா. பேரன்பு, பேய் எல்லாம் பாவம், சகா, சர்வம் தாளமயம், வந்தா ராஜாவாதான் வருவேன். தில்லுக்கு துட்டு 2, பொதுநலன் கருதி. அவதார வேட்டை, நேத்ரா,
உறங்காபுலி,வாண்டு, தேவ், கோகோ மாகோ. சித்திரம் பேசுதடி 2, ஏழாவது காதல், காதல் மட்டும் வேணா, டுலெட், அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்,
கண்ணே கலைமானே, எல்.கே.ஜி, பெட்டிக்கடை
தேடி வந்த நோய், அடடே, விளம்பரம், பிரிவதில்லை, தாதா 87, தடம், 90 ML,
திருமணம், கபிலவஸ்து, ஸ்பாட், பொட்டு, சத்ரு, பூமராங், கில்லி பம்பரம் கோலி, அகவன், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,
ஜுலை காற்றில், நெடுநல்வாடை, சேட்டக்காரங்க, பதனி, நீர்த்திரை, மானசி, பட்டிபுலம், சாரல், அக்னி தேவி, எம்புரான்,
ஐரா, சூப்பர் டீலக்ஸ், நட்பே துணை, கணேசா மீண்டும் சந்திப்போம், குடிமகன், குப்பத்து ராஜா, உறியடி 2, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், ராக்கி தி ரவென்ஞ்ச், வாட்ச்மேன்,
ழகரம், காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப் பூக்கள், அழகரும் இரண்டு அல்லக்கைகளும், முடிவில்லா புன்னகை, தேவராட்டம், கே 13, தனிமை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை,
எங்கு சென்றாய் என் உயிரே, கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன், 100, அயோக்யா, மான்ஸ்டர், மிஸ்டர் லோக்கல், நட்புன்னா என்னான்னு தெரியுமா,
லிசா, நீயா 2, ஒளடதம், பேரரழகி ஐஎஸ்ஓ, சீனி, வண்ணக்கிளி பாரதி, தேவி 2, என்.ஜி.கே, திருட்டுக்கல்யாணம், கொலைகாரன்,
ஜெயிக்கப் போவது யாரு, ருசித்து பார் என் அன்பை, கேம் ஓவர், சுட்டுப்பிடிக்க உத்தரவு, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, தும்பா, மோசடி, சிந்துபாத், ஜீவி, தர்ம பிரபு,
நட்சத்திர ஜன்னலில், ஹவுஸ் ஓனர், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, களவாணி 2, காதல் முன்னேற்ற கழகம், ராட்சசி, வாழ்த்துகிறேன், கூர்கா, கொரில்லா,
போதை ஏறி புத்தி மாறி, தோழர் வெங்கடேசன், வெண்ணிலா கபடி குழு 2, ஆடை, கடாரம் கொண்டான், உணர்வு, ஆறடி, ஏ 1, சென்னை பழனி மார்ஸ், கொளஞ்சி,
கழுகு 2, ஐஆர்8, ஜாக்பாட், தொரட்டி, நேர்கொண்ட பார்வை, கொலையுதிர் காலம், ரீல், சீமபுரம், வளையல், கோமாளி,
மான்குட்டி, கென்னடி கிளப், பக்ரீத், காதல் பிரதேசம், மெய், சாஹோ, சிக்சர், குற்ற நிலை, மயூரன், மகாமுனி,
சிவப்பு மஞ்சள் பச்சை, ஜாம்பி, என் காதலி சீன் போடுறா, ஒங்கள போடணும் சார், பெருநாளி, காப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7, சூப்பர் டூப்பர், என்றும் உன் நினைவிலே, கோலா,
நமக்குள் நாம், நம்ம வீட்டுப் பிள்ளை, திட்டம் போட்டு திருடுற கூட்டம், அசுரன், 100% காதல், அருவம், பெட்ரோமாக்ஸ், பப்பி, பெள பெள, காவியன்,
பிகில், கைதி, பட்லர் பாலு, மிக மிக அவசரம், தவன், ஆக்‌ஷன், சங்கத்தமிழன், ஆதித்ய வர்மா, கேடி (எ) கருப்பு துரை, மேகி, பணம் காய்க்கும் மரம்,
பேய் வால பிடிச்ச கதை, அடுத்த சாட்டை 2, அழியாத கோலங்கள் 2, எனை நோக்கி பாயும் தோட்டா, மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தீமைக்கும் நன்மை செய், தனுசு ராசி நேயர்களே, குண்டு, இருட்டு,
ஜடா, 50 ரூபா, கேப்மாரி, சாம்பியன், சென்னை டூ பாங்காக், காளிதாஸ், கருத்துகளைப் பதிவு செய், மெரினா புரட்சி, மங்குனி பாண்டியர்கள், திருப்பதிசாமி குடும்பம், ஹீரோ,
கைலா, பரமு, தம்பி, விருது, 50/50, நான் அவளை சந்தித்த போது, பக்சராக்‌ஷரம், சில்லுக் கருப்பட்டி, உதய், வி 1, பரிகாரம்.

ஆர்யா, சாயஷா காதல் திருமணம்:

திரையுலகில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு 20919ம் ஆண்டு பல நடிகர்களுக்கு சினிமாவில் வாழ்கையை கொடுத்ததுபோல் சில நடிகர்களுக்கு இல்வாழ்கையையும் கொடுத்திருக்கிறது.
நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நடிகைஅமலாபாலை மணந்து பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற இயக்குனர் ஏ.எல்.விஜய் தனது உறவுக்கார பெண் டாக்டர் ஐஸ்வர்யாவை மணந்தார்.
ஒஸ்தி படத்தில் சிம்புவுடனும், மயக்கம் என்ன படத்தில் தனுஷுடனும் நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் தன்னுடன் படித்த அமெரிக்க மாணவர் ஜோ லாங்கெல்லாவை காதலித்து மணந்தார்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் இயக்குனரின் தங்கை சிந்துவை மணந்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை, ஜோக்கர் படங்களில நடித்த காயத்ரி மலையாள திரைப்பட கேமராமேன் ஜீவன் என்பவரை மணந்தார்.
சந்தானத்துடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்த ஜாங்கிரி மதுமிதா தனது நீண்ட நாள் காதலர் மோசஸை திருமணம் செய்தார்.

 

நெஞ்சம் மறப்பதில்லை…
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத சாதனைகள் செய்தவர்கள் கடந்த ஆண்டில் இந்த பூவுலகை விட்டு மறைந்தனர். ஆனால் அவர்களை திரை யுலகம் இருக்கும் வரை யாராலும் மறக்கமுடியாது:
* முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாததே, ஜானி காலத்தால் அழிக்க முடியாத பல்வேறு படங்களை இயக்கிய மகேந்திரன். கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக குண்சித்ர வேடங்களிலும் நடித்தார். இறுதிகாலகட்டங்களில் அவர் நடிகராகவும் மாறினார். கடந்த ஏப்ரல் 2ல் அவர் மரணம் அடைந்தார்.
*மறக்க முடியாத மற்றொரு பழ்ம்பெரும் நடிகை நடிகை விஜயநிர்மலா. 200 படங்களில் நடித்த இவர் 40 படங்களை இயக்கியும் இருக்கிறார். சென்ற ஜூன் 27ம் தேதி காலமானார். அவருக்கு வயது 73. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என கின்னஸ் சாதனையில் இவரது பெயர் இடம்பிடித்தி ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழில் ஆசை முகம், பணம் படைத்தவன், அதே கண்கள், நெஞ்சிருக்கும் வரை மற்றும் தெலுங்கு, மலையாளம் என தென்னிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை கீதாஞ்சலி. இவர் கடந்த அக்டோபர் 31ம் தேதி தனது 71வது வயதில் மரணம் அடைந்தார்.
* நடிகர் கிரேஸி மோகன் 66வது வயதில் ஜூன் 10ம் தேதி மரணம் அடைந்தார்.
*இயக்குனர், நடிகர் ராஜசேகர், நடிகர் பாலாசிங் கொல்லுப்புடி மாமருதிராவ், காமெடி நடிகர்கள் டைப்பிஸ்ட் கோபு, கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர்கள் வெங்கட்ராமரெட்டி, ஆலயம் ஸ்ரீராம் 2019ல்மரணம் அடந்தார்கள். அவர்களுக்கு திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

Related posts

மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வர் ஆகிறார்.. 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடிக்கிறது

Jai Chandran

 நாக பாம்பை கையில் பிடித்த நடிகர் சிம்பு… ’ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

இரும்பன் ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend