பொது செய்திகள்

17-வது நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

முத்தலாக் சட்ட மசோதா மீண்டும் தாக்கல்

புதுடெல்லி ஜூன் 16: சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் 2வது முறையாக மத்திய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. இதையடுத்து, புதிய 17-வது மக்களவை அடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர், நாளை 17-ந்தேதி தொடங்குகிறது.
முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. எம்.பி. வீரேந்திரகுமார், புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். 19-ந்தேதி, சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும்.
20-ந்தேதி, இரு அவைகளும் அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ஜூலை 5-ந்தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ஜூலை 26-ந்தேதிவரை கூட்டத்தொடர் நடக்கும் என தெரிகிறது. முத்தலாக் தடை உள்பட 10 அவசர சட்டங்களை மசோதாக்களாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த முதல் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த மத்திய அரசு விரும்புகிறது.
இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளை புறம் தள்ளி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்க வேண்டும் என இன்று நடந்தமத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார. இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் ஓ’ பிரையன், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close