விமர்சனம்

100 (பட விமர்சனம்)

படம்: 100

நடிப்பு: அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ராஜ் அய்யப்பா, 
தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன்
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: கிருஷ்ணன் வசநத்
இயக்கம்: சாம் ஆண்டன்

போலீஸ் ஆவதற்காக அப்பாயிண்மென்ட் ஆர்டருக்காக காத்திருக்கிறார் அதர்வா. இதற்கிடை யில் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் சிறு சிறு மோதல்களில் ஈடுபடுகிறார். சரியான நேரத்தில் அவருக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. அதை வைத்து போதை பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க முயலும்போது இளம்பெண்கள் கடத்தப்படும் ரகசியமும் அம்பலத்துக்கு வருகிறது. அதற்கு உதவியாக தனது நண்பனே இருக்கும் விவரம் தெரியவர அதிர்ச்சி அடைகிறார். ஆதாரங் களுடன் அவரை போலீஸ் சுற்றி வளைக்கிறது. நண்பனிடம் தனியாக பேசும் அதர்வாவுக்கு அப்போதுதான் அவரது தங்கையை கடத்தி வைத்து ஒரு கும்பல் மிரட்டும் தகவல் கிடைக்கிறது. காணாமல்போன நண்பனின் தங்கையையும் மேலும் சில இளம்பெண்களையும் அதர்வா எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்.

துடிப்பான போலீஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்று ஆர்வத்துடன் வரும் அதர்வாவுக்கு போலீஸ் அலுவலக அறையில் 100 தொலைபேசி அவசர அழைப்புக்கு பதில் சொல்லும் வேலை தரப்பட்டவுடன் விரக்தி ஆகிறார். பணக்கார வீட்டு பையன் ஒருவன் கடத்தப் பட்ட தகவல் கிடைத்ததும் மற்றொரு குழு செல்போனை டிராக் செய்து பையன் எங்கு இருக்கி றான் என்பதை தப்பும் தவறுமாக கணிக்க அதர்வாவோ சரியாக கணித்துவிட்டு சம்பவ இடத்துக்கு சென்று பையனை மீட்டு வருவது விறுவிறு காட்சி.

அடிக்கடி சீட்டிலிருந்து எழுந்து செல்லும் அதர்வாவை பார்க்கும் கமிஷனர் நரேன், எங்க போறே என்று கேட்க டீ சாப்பிட்டுவிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு அதிரடிக்கு கிளம்பும்போது ரசிகர் களை உற்சாகப்படுத்துகிறார். தனக்கு தெரிந்த பெண் கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் தகவல் தெரிந்ததும் அவரை கண்டுபிடித்து மீட்க முயல்வதும் அந்த நேரத்தில் தனது நண்பரின் தங்கையை அதே கூட்டம் பிடித்து வைத்திருப்பதை அறிந்து அவரை மீட்க எடுக்கும் அதிரடிகள் காட்சிகளின் வேகத்தை றெக்கை கட்டி பறக்க வைக்கிறது. 
ஹீரோயினாக வரும் ஹன்சிகாவுக்கு பெரிய வேலை இல்லை. தொடக்கத்தில் வந்து மாயமாகும் அவர் பிறகு கிளைமாக்ஸ் நெருக்கத்தில் தலைகாட்டுகிறார். அவரது தம்பியாக வரும் ராஜ் அய்யப்பாவுக்கு எதிர்பாராத கதாபாத்திரம் தந்திருப்பதை கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸாக வைத்திருப்பதும், இந்த பூனையும் பால்குடிக்குமா என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு திடீரென்று வில்லனாகி ஆர்ப்பாட்டம் செய்வதுமாக திடீர் டுவிஸ்ட் தந்து மிரள வைக்கிறார் இயக்குனர். 
உட்கார்ந்த இடத்திலேயே டயலாக் காமெடி செய்கிறார் யோகி பாபு.
பிஸ்டல் பெருமாள் கதாபாத்திரம் ஏற்று குணசித்ர நடிப்பில் மிளர்கிறார் ராதாரவி. மறைந்த நடிகர் சீனு மோகன் கதாபாத்திரம் கற்பனைக்குள் அடங்காதது.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்ப கலர்டோன்களை மாற்றிக்காட்டுவது பிளஸ்.இயக்குனர் சாம் ஆண்டன் காட்சிகளை மெல்ல மெல்ல பரபரப்பாக்குவதும் கிளைமாக்ஸில் திருப்பம் வைத்து ஆச்சர்யப்பட வைப்பதும் அப்ளாஸ் பெறுகிறது.
100-சஸ்பென்ஸ் த்ரில்லர்

.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close