விமர்சனம்

வெள்ளை பூக்கள் (பட விமர்சனம்)

படம்: வெள்ளை பூக்கள்
நடிப்பு: விவேக், சார்லி, பூஜா தேவரியா, தேவ்
தயாரிப்பு: இன்டஸ்கிரியேஷன்
இசை: ராம்கோபால்
ஒளிப்பதிவு: ஜெரால்டு பீட்டர்
இயக்கம்: விவேக் இளங்கோவன்

புதுஇயக்குனர் விவேக் இளங்கோவன் இந்த கதையை விவேக்கிடம் கூறும் போதே, ‘இது சத்யராஜ் போன்ற ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதை அந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்தால் எடுபடுமா?’ என்று கேட்டா ராம். இப்படி அவர் சொன்னபோது கதை நகைச்சுவைக்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதேசமயம்  நேர்மையான உழைப்பை தந்து கதாபாத்திரத்தையும் நிற்க வைத்திருக்கிறார் விவேக். 
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விவேக், அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் தேவ்வை பார்க்க செல்கிறார்.  தேவ், அமெரிக்க பெண்ணை மணந்துகொண்டு வாழ்ந்து வருகிறார். சந்தோஷமுடன் மகனை பார்க்க வந்த விவேக்கிற்கு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் திடீரென்று காணாமல்போகிறார். இந்த விஷயம் தெரிந்தவுடன் விவேக்கின் போலீஸ் புத்தி துப்பறிய துடிக்கிறது. திடீரென்று விவேக்கின் மகன் தேவ் காணாமல் போகிறார். இது இன்னொரு அதிர்ச்சியாக அமைகிறது. காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்குகிறார் விவேக். இதில் குற்றவாளி யார் என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.

 இமேஜ் உள்ள ஹீரோக்கள் நடித்திருந்தால் இப்படம் ஒரு வழக்கமான படமாகவே கூட ஆகியிருக்கலாம், இயக்குனரின் திறமையும் அடிபட்டுபோயிருக்கலாம். அப்படியில்லாதது இயக்குனர் விவேக் இளங்கோவனுக்கு பிளஸ். அவரது திறமையும் வெளிச்சம் போட்டு காட்டும் படமாகவும், நடிகர் விவேக்கின் காமெடி இமேஜை வேறொரு பரிமாணத்துக்கு மாற்றும் படமாகவும் அமைந்திருப்பதே படக் குழுவின் வித்தியாசமான முயற்சிக்கு கிடைத்த வெற்றி

. நக்கல், நய்யாண்டியுடன் செய்யும் காமெடித்தனத்தை மூட்டைகட்டி வைத்து விட்டு துப்பறியும் சாம்புவாக மாறியிருக்கிறார் விவேக். அவரது நண்பராக சார்லி அவ்வப்போது சிரிப்பு பொடி தூவுகிறார். காட்சிகளில் வேகம் காட்டியிருக்கும் அதேசமயத்தில் உரையாடல் காட்சிகளுக்கு நிறைய கத்தரி போட்டிருந்தால் படத்தின் வேகம் இன்னும் கூடியிருக்கும்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் சுழன்றிருக்கும் கேமரா ஆர்வத்தை தூண்டுகிறது. 

‘வெள்ளை பூக்கள்’ – விறு விறு 

 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close