விமர்சனம்

வாட்ச்மேன் (பட விமர்சனம்)

படம்: வாட்ச்மேன்
நடிப்பு: ஜி.வி.பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு, ராஜ் அருண். சுமன்
தயாரிப்பு: அருண்மொழி மாணிக்கம்
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: நிரவ் ஷா
இயக்கம்: விஜய்

கந்து வட்டிக்கு கடன் வாங்கி தண்ணீர் பிஸ்னஸ் செய்யும் பிரகாஷ்குமார் நஷ்டம் ஏற்பட்டதால் அதிலிருந்து விலகுகிறார். வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார். நாளைக்குள் கடனை கட்டாவிட் டால் அடியாட்களை அனுப்பிவிடுவேன் என்று கந்துவட்டிக்கு கடன் கொடுத்தவன் மிரட்டுகிறான். கையில் பணம் இல்லாததால் வேறு இடங் களில் கடன் வாங்கியாவது கந்துவட்டிக் கடனை தர முயற்சித்தும் முடியாமல் போகவே பணக்கார வீட்டில் திருட முற்படு கிறார். நள்ளிரவில் பங்களா ஒன்றிற்குள் சுவர் ஏறி குதித்து திருட எண்ணுகிறார். எதிர்பாராத விதமாக பங்களா வீட்டு காவல்  நாய், பிரகாஷை துரத்துகிறது. தப்பி ஓட முயன்றாலும் விடாமல் துரத்துகிறது. ஒரு கட்டத்தில் பங்களா வீட்டிற்குள் பிரகாஷ் நுழைகிறார். ஆள் அரவம் இல்லாத பங்களாவிற்குள் நழையும் பிரகாஷ் அங்கு  நடமாட்டம் இருப்பதை உணர்கிறார். அது தீவிரவாதிகள் நடமாட்டம்.  பங்களா ஓனர் சுமன் ஒரு மாஜி போலீஸ் அதிகாரி.  தன்னை தாக்க வரும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி ரகசிய அறையில்  ஒளிந்து கொள்கிறார். பங்களாவிற்குள் பிரகாஷ்குமார் நழைந்ததும் அங்கிருக்கும் தீவிரவாதிகள் அவரை நோக்கி சுடுகின்றனர். பயந்து ஓடும் பிரகாஷை ரகசிய அறையில் இருக்கும் சுமன் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் இருவருமே தீவிரவாதி களிடம் சிக்குகின்றனர். அந்த சமயத்தில் நாயின் சாகசம் மனதை உருக்குவ தாக அமைகிறது.

போலீஸ் நிலைய வாசலில் தொடங்கம் முதல் காட்சியில் பிரகாஷ் மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக புறபட்டதும் காட்சியில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. யாரையோ தாக்கப்போகிறார் என்று பார்த்தால் மீண்டும் கடன் கேட்பதற்காக யோகிபாபுவுடன் ஜிவி பிரகாஷுடன் அலைவது காமெடி.

பணம் திருடுவதற்காக பங்களாவிற்குள் பிரகாஷ் குதித்ததும் தன் அருகிலேயே நாய் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியில் மூழ்குவது அவர் மட்டுமல்ல ரசிகர்களும்தான். 
நாய் விடாமல் பிரகாஷை துரத்த பயத்தில் அவர் ஆழமான பள்ளத்தில் விழுந்துவிட்டு வெளியில் வரமுடியாமல் திணறும்போது விரட்டி வந்த நாயே காப்பாற்றுவதற்காக கயிறு, இரும்பு கம்பி போன்றவற்றை பிரகா ஷுக்கு எடுத்துப்போடுவது என்னடா நடக்குது இங்கே….? என்று கேட்கத் தோன்றுகிறது.
படத்தின் பெரும்பகுதி  பங்களாவிற்குள்ளேயே நடக்கிறது. தீவிரவாதிகள் என்று கூறிக்கொள் பவர்கள் நாயை சரமாரியாக சுட்ட பிறகும் நாயை கொல்ல முடியாமல் திணறுவதைப் பார்க்கும்போது  என்ன டெரோரிஷ்ட்டோ இவர்கள்  என்ற முணுமுணுப்பு எதிரொலிக் கிறது. அதேசமயம் தீவிரவாதிகளுக்கு டேக்கா காட்டி சேர், ஷோபா போன்றவற்றுக்கிடையே மறைந்துக்கொள்ளும் நாய் குழந்தைகளை குதுகலப்படுத்துகிறது. 
கதாநாயகி சம்யுக்தா ஹெக்டே ஊறுகாய்போல் பயன்பட்டிருக்கிறார். படப்பிடிப்பின் பெரும்பகுதி இருளிலேயே படமாகி இருக்கிறார் நிரவ் ஷா. 
ஜிவி.பிரகாஷின் இசையில் கிளைமாக்ஸ் முடிந்ததும் நடிகை சாயிஷா ஒரு குத்தாட்டம்போட்டு ஸ்பெஷல் ட்ரீட் தந்திருக்கிறார்.
‘வாட்ச்மேன்’ த்ரில்.

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close