அரசியல்

வலிமை மிக்க இந்தியாவை உருவாக மீண்டும் பாஜ ஆட்சி

கேரளா வந்த பிரதமர் மோடி பேச்சு

திருவனந்தபுரம்: ஜூன்: 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றி ,பெற்று மத்தியில் மீண்டும் 2வது முறையாக மோடி தலைமையில் பாஜ ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இன்று கேரளா வந்தார் மோடி. குருவாயூரி உள்ள கிருஷ்ணர் கோயில் சென்ற அவ்ர் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தி எடைக்கு எடை தாமரை பூக்கள் அளித்தார். கோயிலில் தரிசனம் செய்த பிறகு குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். அவர் கூறியது:
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்களின் மனநிலையை யூகிக்க இயலாத அரசியல் பண்டிதர்கள் கணித்தவற்றை எல்லாம் மீறி பா.ஜ.க.வுக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்தனர். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கேரள வாக்காளர்களுக்கும் நன்றி. இந்த தேர்தலின் மூலம் மக்கள்தான் கடவுள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வினர் தேர்தல் அரசியலுக்காக இருப்பவர்கள் அல்ல. ஆண்டின் 365 நாட்களும் மக்களுக்கு சேவையாற்ற இருப்பவர்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதற்காக வரவில்லை. வலிமை மிக்கதொரு நாட்டை உருவாக்கவும், உலக அரங்கில் இந்தியாவுக்கு உரித்தான இடம் கிடைக்க தவம் இயற்றுவதற்காகவும் நாங்கள் வந்திருக்கிறோம்.
பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு எம்.பி.யை கூட தராத நிலையில் தேர்தல் முடிந்ததும் முதல் பயணமாக நான் கேரளாவை தேர்ந்தெடுத்தது ஏன்? என சிலர் வியப்படையலாம். என்னைப் பொருத்தவரை எனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியைப் போல் கேரளாவும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close