செய்திகள்பொது செய்திகள்

வங்காளதேசை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

அரை இறுதிக்குள் நுழைந்தது

பர்மிங்காம்: உலகக்கோப்பை கிரிக்கெட் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் எச்ட்ச்ல்லி நடந்து வருகிறது. இந்தியா – வங்காள தேச அணிகள் மோதின . டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டனர். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினார்கள்.
உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 4வது சதமடித்தார்/ 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரோஹித். லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரிஷப் பந்த் 48 ரன்னில் வெளியேறினார். இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்தது இந்திய அணி. 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது, 48 ஒவர்களில் அனைத்து விககெட்டுகளும் 286 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்திய அணி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்தது..

:

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close