விமர்சனம்

ராட்சசி (பட விமர்சனம்)

படம்:ராட்சசி

நடிப்பு: ஜோதிகா. ஹரீஸ் பெரடி, பூர்ணிமா, சத்யன், அருள்தாஸ், வர்கிஸ் மேத்யூ, அகல்யா, முத்துராமன்
தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு (டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்)
இசை சான் ரோல்டன்
ஒளிப்பதிவு கோகுல் பெனாய்
இயக்கம்: கவுதம்ராஜ்

இடிந்த காம்பவுண்ட், குப்பை கிடங்குபோல் அழுக்கடைந்த சுவர்கள், மல்லுகட்டும் மாணவர்கள், தம்மடிக்கும் வாண்டுகள் என எதையும் கண்டுகொள்ளாத ஆசிரிய, ஆசிரியைகள் என அந்த கிராமத்து அரசு பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக வருகிறார். ஜோதிகா. ஹிட்லராக மாறி தடாலடி நடவடிக்கை எடுகிறார். வேலை செய்யாமல் ஏமாற்றும் ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்கிறார். ஜாதி வேற்றுமையால் சண்டைபோடும் மாணவர்களை கட்டுக்குள் கொண்டு வருகிறார். பள்ளி கட்டிங்களுக்கு புதிய வர்ணம் தீட்டி பளபளப்பாக்குகிறார். ஜோதிகாவின் அதிரடி தொடரத் தொடர பள்ளி நிர்வாகம் திறம்படுகிறது. இதை பார்த்து பொறாமை கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகி எப்படியாவது அரசு பள்ளியை பழைய நிலைக்கு கொண்டு வந்து தனது கான்வென்ட் பள்ளியின் கெத்தை தக்க வைக்க முயல்கிறார். அவரது பேராசையை தவுடுபொடி யாக்குகிறார் ஜோதிகா. இவர்களுக்குள் நடக்கும் மோதல் எப்படி முடிகிறது என்பதே கிளை மாக்ஸ்.

இப்படத்தை  கதையாக யாராவது சொல்லக்கேட்டால் எல்லா விஷயமும் தினமும் பத்திரிகையில் படிப்பதுபோலத்தானே இருக்கிறது என்றுதான் மேலோட்டமாக எண்ணத்தோன்றும் ஆனால் அதை திரைவடிவமாக பார்க்கும்போது ஒவ்வொரு சீனுக்கும கைதட்டல் அள்ளுகிறது. பள்ளிக்கூட கதை ஒன்றை இவ்வளவு இன்டிரஸ்ட்டிங்காக  தர முடியுமா என்று பலரையும் சிந்திக்க வைக்கிறது.
காட்டன் சேலை, ஜாக்கெட் அணிந்து தோளில் பையுடன் கீதா ராணி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடந்துவரும்போது அவரது கண்ணில் தெறிக்கும் கோபமே அட்டகாசம் செய்பவர்களை அடக்கிபோட்டுவிடுகிறது. தன்னைவிட சீனியர் என்ற ஃபார்மாலிட்டியெல்லாம் தூக்கி வைத்து விட்டு தவறு செய்யும ஆசிரியர்களை சகட்டு மேனிக்கு பின்னி பெடலெடுக்கும்போது இப்படி யொரு ஹெஸ்மாஸ்ட்டரோ, ஹெட்மிஸ்டரோ எல்லா அரசு பள்ளியிலும இருந்தால் எப்படி இருக்கும என்று யோசிக்க வைத்துவிடுகிறார்.
ஆசிரியர்கள பாடம் நடத்தும்போது மாணவர்களுடன் அமர்ந்து அவரகள் பாடம் நடத்தும் அழகை கண்டு ஆத்திரம் அடையும் ஜோதிகா அவர்களிடம் 3 கேள்விகள் கேட்டு திணறடிப்பதும் அதற்கு பயந்து ஆசியர்கள் வீட்டில் சென்று மறுநாள் நடத்த வேண்டிய பாடத்தை விடிய விடிய படிப்பதும் கலகலப்பான காட்சியாக இருந்தாலும் அர்த்தமுள்ள அசத்தல் காட்சிகள். 9ம் வகுப்பில் பெயில் ஆன மாணவர்களுக்கு பாஸ்போட்டு அவர்களை 10ம் வகுப்பில் சேர்க்கும் ஜோதிகாவை அந்த விவகாரத்தை வைத்தே சிறையில் தள்ளும்போது கதையில் சூடு பறக்கிறது. 
மாணவர்களின் தனித்திறமையை அறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக ஜோதிகாவே களத்தில் இறங்கி அவர்களுடன் விளையாடும்போது இப்படிக்கூட ஆசிரியைகள் இருப்பார்களா என்று பேசவைக்கிறார்.. கோபத்தையை குணமாக கொட்டித் தீர்க்கும் ஜோதிகா விடம் அந்த 5 வயது சிறுவன் ஐ லவ் யூ சொல்வதும் அதை ஜோதிகா ரசித்து சிரிப்பதும் இடிமின்னலுக்கு இடையே வீசும் தென்றலாய் சுகமளிக்கிறது.
ஜோதிகாவை பற்றி நிறைய நிறைய சொன்னாலும் ரவுடிகள் அரிவாளுடன் ரவுண்டு கட்டி நிற்கும்போது அவர்களை வெறும் கையால தடுத்து தூக்கி வீசுவது கொஞ்சம் ஓவர்தான்.
கான்வென்ட் தாளாளர் ஹரிஷ் பெராடி ஜோதிகாவுக்கு தொல்லைகொடுத்தாலும் குழந்தைகளை கொல்லும் அளவுக்கு கொடுமைக்காரராக இல்லாமிலிருப்பது ஆற்தல்.. டிரில் மாஸ்டர் சத்யன் எதையாவது ஒன்றை வாயில் போடடு கொரித்துக்கொண்டு மற்றவர்களை கமென்ட் அடிக்கும்போது சிரிக்க வைக்கிறார்.
புது இயக்குனர் கவுதம்ராஜ் இப்படியொரு கதைக்களத்தை முதல்படத்திலேயே யோசித்திருப்பது அவரது மெட்சூரிட்டியை காட்டுகிறது. சான் ரோல்டன் இசை அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. கோகுல் பெனசி கேமரா காட்சிகளை அப்பட்டமாக படமாக்கியிருக் கிறது. குடும்பத்துடன் மட்டுமல்ல ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவிகளும் குறிப்பாக ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம்.
‘ராட்சசி’ சாட்டை சுழற்றல்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close